காஞ்சிபுரத்தில் தமாகா நிர்வாகி இல்ல திருமண வரவேற்பில் கலந்து கொண்ட தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தின் வளர்ச்சியா ? டாஸ்மாக் வளர்ச்சியா என்றால் டாஸ்மாக்கே வளர்ச்சி கொண்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை  கருத்தில் கொண்டு அரசு மற்றும் ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நீட் தேர்வு விலக்கு என்ற  நிலையில் மாணவர்களின் கல்வியில் அரசியலை புகுத்துவதால் , பெற்றோர்கள், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்” என கருத்து தெரிவித்தார்.






 

முன்னதாக காஞ்சிபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி கஜேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த த.மா.கா தலைவர் ஜி. கே.வாசனுக்கு  மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமக்களை வாழ்த்திய ஜி.கே. வாசன் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

கடந்த அரசு 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கிய நிலையில்

 

 செய்தியாளர்கள்  மத்தியில் ஜிகே வாசன் பேசியதாவது : தமிழகத்தின் வளர்ச்சி நலனை கொண்டு ஆளுநரும் , அவரை எதிரியாக பார்க்காமல் இணைந்து அரசு செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீட் தேர்வு பிரச்சனை தொடர்கதையாக தமிழகத்தில் உள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ள நிலையில் கடந்த அரசு 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கிய நிலையில், தற்போது மாணவர்கள் சிறப்பான இடங்களை பிடித்து வருகின்றனர்.



 

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே குழப்பம் 

 

இந்நிலையில் அரசு நீட் விலக்கு என்ற வாசகத்தை முன்னிறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது மாணவர்களின் கல்வியில் அரசியலை புகுத்த நினைக்கும் செயலை நிறுத்த வேண்டும்.

 

டாஸ்மாக்கின் வளர்ச்சியே அதிகம்

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே தமிழகத்தின் வளர்ச்சியா டாஸ்மாக்கின் வளர்ச்சி என்றால் டாஸ்மாக்கின் வளர்ச்சியே அதிகம் உள்ளது. மேலும் போதை பொருட்களின் நடமாட்டத்தால் பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் காவல்துறை இவற்றை இரும்பு கரம் கொண்டு ஓடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



 

 வெற்றிக் கூட்டணியில் தாமாக

 

வரும் நாடாளுமன்றத்திற்கான ஆயுதப் பணிகளை தாமாக மேற்கொண்டு வருவதாகவும், வெற்றிக் கூட்டணியில் கண்டிப்பாக த.மா.கா இருக்கும் என்பது உறுதி எனவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தாமாக உறுப்பினர்கள் செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தாமாக நிர்வாகிகள் தென்னேரி பாபுநாயுடு , கார்த்திக் , ஜி.கே.கஜேந்திரன், சுகுமார் உள்ளிட்ட ஏராளமான த.மா.கா. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.