தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிற்கு சொந்தமாக, சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் பங்களா உள்ளது. சாலை அகலப்படுத்தும் பணிக்காக அந்த பங்களாவிற்கு உட்பட்ட 784 மீட்டர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இந்த பணிகளை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.




இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சாலை விரிவாக்க பணிகளுக்கு பையனூர் பங்களாவிற்கு உட்பட்ட நிலம் சாலை விரிவாக்கப் பணிக்கு மிகவும் அவசியமானது என்று வாதிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சசிகலாவிற்கு சொந்தமான பையனூர் பங்களாவை தமிழக அரசு முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.