நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

சீமான் வழக்கு: 

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கடந்த 2011 ஆன் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் 2012 ஆம் ஆண்டு அதே வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்,  சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது சீமானின் வழக்கை ரத்து செய்ய முடியாது நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். 

மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு  முடிக்க வேண்டும் என  உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து,  வழக்கின் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை  சம்மன் அனுப்பியது. 

இதையும் படிங்க: EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...

சீமான் மேல்முறையீடு:

உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்ததை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சீமான். அந்த மேல்முறையீட்டு மனுவில் 12 வாரங்களுக்குள் வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

தடை விதித்த உச்சநீதிமன்றம்:

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி நாகரத்தினா, சதீஷ் சந்திர வர்மா ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமான் தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர். அப்போது பதிலளித்த சீமான் இந்த விவகாரத்தில் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் வழக்கை இதுவரை மூன்று முறை திரும்ப பெற்றுள்ளதாக வாதிட்டது. 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் “இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வேண்டும் என்றும் ஏன் இரு தரப்பும் பேசி ஒரு சுமூக முடிவு எடுக்கக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், சுமூக முயற்சி எடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் தெரிவித்தார்

இதற்கு பிறகு கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர், மேலும் 12 வாரங்களில் வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  தொடர்ந்து இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு ஏற்ப்பட முடியுமா என்பதை ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.