அரசின் நலத்திட்டங்களில் எனது போட்டோக்களை பயன்படுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பற்ற பின் அறிவித்தார். அது பின்பற்றவும் செய்தது. காரணம், கடந்த ஆட்சியில் அதிமுகவினர் வழங்கிய நலத்திட்ட உதவிகளில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதை வைத்து ‛ஸ்டிக்கர் பாய்ஸ்’ என்று கூட அதிமுகவினரை ட்ரோல் செய்தவர்கள் உண்டு. 




இந்நிலையில் தான் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எவர்வின் பள்ளியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அதில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் போட்ட அரசின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. 




எதை முதல்வர் வேண்டாம் என்றாரோ... அதே ஏற்பாடுகள்  அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலேயே செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் மீண்டும் ஸ்டிக்கர் கலாச்சாரம் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் புகுந்துள்ளது.  விளம்பரம் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 






இதே போல் தான் பேனர்கள் போஸ்டர்கள் வைக்கும் விவகாரத்திலும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையை மீறி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்களும், பேனர்களையும் திமுகவினர் வைத்து வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரத்தில் பேனர் வைத்ததால் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்தது. அந்த வரிசையில் தற்போது ஸ்டிக்கர் கலாச்சாரமும் வந்திருப்பதாகவே தெரிகிறது. 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண