நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்ட்ராவில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கான பள்ளி பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்திலும் 12ம் வகுப்பு தவிர, பிற வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதனால், நீட் தேர்வை நடப்பாண்டில் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.

CBSE exams have now got cancelled due to the second wave of #COVID19. With increasing cases and fatalities, when our doctors are fighting hard against all odds, is this the right time to hold National Eligibility Cum Entrance Test (NEET) for PG courses?@PMOIndia@drharshvardhan pic.twitter.com/ALMtqnLXLA
— M.K.Stalin (@mkstalin) April 15, 2021

Continues below advertisement

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டிருக்க, அனைத்து இடர்களையும் எதிர்த்து நமது மருத்துவர்களும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்க, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்த இது சரியான நேரமா?” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.