தமிழகத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், திருநங்கையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் #TransgendersDay இன்று!

திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்!

அவர் வழியில் திருநங்கையர்-திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும்! pic.twitter.com/Y8j3RTro2J
— M.K.Stalin (@mkstalin) April 15, 2021

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆண் - பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் இன்று திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கருணாநிதி. அவர் வழியில் தி.மு.க. என்றும் திருநங்கையர் / திருநம்பியர் உரிமைகளைக் காத்து நிற்கும் என்ற உறுதியினை வழங்கி, திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.