விலைவாசி உயர்வால் இலங்கை நிலைமை இந்தியாவிற்கு வந்துவிடக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாலை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு கூறினார் .
மெட்ரோ ரயில் நிலைய பாணியில் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி - ஏற்பாடு பணிகள் தீவிரம்
ஆனால் எட்டு வருடம் ஆகிவிட்டது. இதுவரை 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக வேலைவாய்ப்பில் இருப்பவர்களை ஒன்றிய அரசு வீட்டுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு தான் ஆகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
அதேசமயம் பழைய ஓய்வூதிய திட்டம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது என்றும் முத்தரசன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள், சிங்களர்கள் இணைந்து இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அந்த நிலை இந்தியாவிற்கு வந்துவிட கூடாது.
காரணம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. அதை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது. இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்டது. இதை மறக்கும் வகையில் நாட்டு மக்களை மத, சாதி, மொழி ரீதியாக பிளவுப்படுத்துகின்றனர். இந்திய நாடாளுமன்றத்திற்குள் நாட்டு மக்கள் புகுவதற்கு வெகு நாட்கள் ஆகாது என மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்