சென்னை ஆலந்தூர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1260 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நிகழ்ச்சி, நங்கநல்லூர் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, செல்வம் எம்பி இ கருணாநிதி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலஅளவை மற்றும் ஆயத்துறை தீர்வை இயக்குனர் டி.ஜெ.வினைய் வரவேற்றார். இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினர்.



 

விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1260 பேருக்கு மனை பட்டா, மற்றும் முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை போன்ற வற்றை வழங்கி பேசும்போது " இந்தநிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நமது தலைவர் அறிவித்தபடி புத்தகங்கள் வழங்கியதாக கூறினார். ஆனால் நிறைய பேர் பூங்கொத்து தான் கொடுத்தார்கள். வருங்காலங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக திருச்சி, சேலம், விழுப்புரம் போன்ற இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவருகிறேன். இன்று தான் அமைச்சர் அன்பரசன் அழைப்பு கொடுத்தார். அவர் எப்போது அழைத்தாலும் ,நான் வருவேன் ஆலந்தூரில் ஏற்கனவே ஒரு கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். இப்பொழுது விளையாட்டு துறை அமைச்சராக இந்த ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெறும் விழா பொருத்தமான விழாவாக உள்ளது. பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுக்கும் பெண்களுக்கு உடனடியாக பட்டா வழங்கும்படி நமது முதல்வர் கூறி இருக்கிறார். வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவாகும் அதற்கு பட்டா அவசியம். அதன்படி பட்டா வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்துறை துறைமூலம் 35க்கும் மேற்பட்ட சேவைகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 



 

அதேபோல் ஜாதி சான்று வருவாய் சான்றிதழ் உடனடியாக வழங்கவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான பல சிறப்பான திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார். அதன்படி 300 கோடி பேருந்து பயணங்களை மகளிர் பயன்படுத்தி உள்ளனர். இதன்மூலம் மாதம் 1200 சேமிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.இந்த அரசு சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது என்றார்இந்த விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்