மதுரை அரசரடி பகுதியிலுள்ள இறையியல் கல்லூரி பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டார். இதனையடுத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வகையில் கேக்வெட்டி வழங்கினார். இதனையடுத்து பல்வேறு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய டிடிவி தினகரன், “மதங்களால் சிலர் மதம்பிடித்து சிலர் நமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி இன்று உலகம் மதம் அடிப்படையில் பிரிந்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் வளர்த்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆன்மீகத்தில் அரசியலை புகுத்தி குரூர எண்ணம் படைத்த சுயநலவாதிகள் இறைத்தன்மையையே தனது கருப்பொருளாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க மதம், சாதியின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் தரம் தாழ்ந்த காலகட்டத்தில் உள்ளோம். இந்த விஞ்ஞான காலத்தில் மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக கறைவது வேதனை அளிக்கிறது, அமமுக அனைவரையும் சமமாக பாவிக்கும் கட்சி., அம்மா, எம்.ஜி.ஆர்,அண்ணா வழியில் அமமுக மனிதநேயத்தை வளர்த்து வருகிறது.



சிறுபான்மை பெரும்பான்மை என கூறி தேர்தல் அரசியல் செய்து லாபம் பார்க்கிறார்கள் அவர்களுக்கு தேர்தல் முடிவு விரைவில் பாடம் கற்பிக்கும்,  நாங்கள் கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்காமல் அனைத்து சமூகத்தினருக்கான வளர்ச்சிக்கான ஆட்சியை மீண்டும் உருவாக்க பிறந்த இயக்கம் அமமுக என்றும்  செக்குரிலிஜம் என்ற பெயரில் சிலர் உங்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தியாவை அமைதி பூங்காவை வைத்திருக்க வேண்டும் என்பது தான் காந்தியின் எண்ணம், ஆங்கிலேயரிடமே ஆட்சி இருந்திருக்கிலாம் என நினைக்கும் வகையில் தற்போது மதங்களை காட்டி நம்மிடையே பிரிவினை உருவாக்கிவருகின்றனர். மதசார்பின்மை, சிறுபான்மை காவலர் என கூறி அரசியல் லாபம் பார்த்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொள்கின்றனர், மதசார்பின்மை என்று கூறிகொண்டு சாதி , மத பிரிவினையை உருவாக்கிவருகின்றனர், மக்களிடையே மதம் என்ற பெயரில் குட்டையை குளப்பி ஆட்சிக்கு வரவேண்டும் என்று செயல்படுகின்றனர். தமிழ், சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரால் பிரிவினையை உருவாக்கி தாத்தா முதல் கொள்ளூபேரன் வரை பரம்பரையாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக பிரிவினையை உருவாக்கிவருகின்றனர்.



தேர்தல் வரும்போது நம்மிடையே சிறுபான்மை பெரும்பான்மை என கூறி வருவார்கள் ஆனால் போலியானவர்களை நம்பாதீர்கள், ஆன்மீகத்தில் உள்ளவர்கள் யாரையும் அழிக்க நினைக்கமாட்டார்கள், அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும், மார்கழி மாதத்தில் தான் கிறிஸ்து பிறந்தவர், பகவத்கீதை, பைபிள், குர்ஆனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மனிதசமூகத்தில் அன்பையும் பாசத்தையும் எடுத்துரைப்பது தான் மதம், தமிழகம் என்றென்றும் அமைதி்பூங்கா அமைய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும், அனைத்து சிறுபான்மையினரையும் அன்பு காட்டி அரவணைப்புதான் பெரும்பான்மை சமூகத்தினரின் நம்பிக்கை என்பது எம்.ஜி.ஆர். அம்மாவின் எண்ணம்" என்றார்