சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், திமுகக்கும் புதிய உற்சாகம் ஏற்படும்
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர் சந்திப்பு
சிவகங்கை தனியார் மஹாலில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்...,“தமிழக மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வின் மூலம் பிற மாநில மாணவர்கள் பிட்பாக்கெட் அடிக்கின்றனர். இதற்குக் காரணமானவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் கற்பிப்பார்கள்,” என்று கூறினார்.
மத்திய அரசு கல்விக்கான நீதியை இதுவரை வழங்கவில்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த “தமிழருக்கான அனைத்து நிதிகளும் வழங்கப்பட்டுள்ளன” என்ற கூற்றுக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு கல்விக்கான நீதியை இதுவரை வழங்கவில்லை. இதன் மூலம் பாரபட்சம் பார்ப்பது யார்? பொய் சொல்லுவது யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கடுமையாக பதிலடி அளித்தார்.
திமுகக்கும் புதிய உற்சாகம் ஏற்படும்
சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், திமுகக்கும் புதிய உற்சாகம் ஏற்படும். முதல் நாள் காரைக்குடி மாதிரி பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தை துவக்குவார். அடுத்த நாள் சிங்கம்புணரி பேரூராட்சியின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைப்பார். பின்னர் அண்ணா மண்டபத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருஉருவ சிலையும், முன்னாள் அமைச்சர் மாதவனின் சிலையும் திறந்து வைப்பார். அதன் பின்னர் கிருந்தாகோட்டையில் சிறுகதை மன்னர் தென்னரசுவின் மார்பு சிலையையும் திறந்து வைக்க உள்ளார். பின்னர் அரசு சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வழங்குவார்,” என தெரிவித்தார்.