அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்திருக்க கூடிய நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களை தனியார் விடுதி ஒன்றில் ஓபிஎஸ் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸின் அழைப்பை மாவட்ட செயலாளர்கள் தரப்பில் ஏற்கவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவர் தரப்பில் இருந்தும் அழைத்தால் மட்டுமே கூட்டத்திற்கு வருவோம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஓபிஎஸுக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிலரை வீட்டிலேயே ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த நிலையில் கட்சி அலுவலக வாயிலில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஓபிஎஸுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்வதற்கான கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது