எம்எல்ஏவாக கூட ஆக முடியாத டிடிவி தினகரன் கட்சி நடத்தாமல் கோஷ்டி வைத்து நடத்தி வரும் அவர், எங்களை பற்றி குறை கூற தகுதியில்லை எனவும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ஆடு மஞ்சலில் குளிப்பாட்டப்பட்டு  எப்பொழுது வேண்டுமானாலும் அவர் வெட்டப்படுவார்” என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தமிழகத்தில் செயல்படாத அரசாகவும், மக்களை பற்றி சிந்திக்காமல் தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கவலைபடாமல் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், தனது கட்சியிலும் அமைச்சர்கள் மத்தியிலும் என்ன நடக்கிறது என்று தெரியாத முதலமைச்சராகவும், அமைச்சர்கள் மத்தியில் மோதல் நிலைபாடு நிகழ்வதால் அமைச்சர்கள் முன்னுக்கு பின்  முரணான கருத்துக்களை அமைச்சர்கள் கூறிவருவதாலும், திறமையில்லாத பொறுப்பற்ற செயல்படாத முதலமைச்சரால் தமிழக மக்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாக சிவி சண்முகம் குற்றஞ்சாட்டினார்.


அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு கேபிள் டிவி குறைந்த சேவை கட்டணத்தில் செயல்பட்டு கொண்டிருந்தது தற்போது பத்து நாட்களாக அரசு கேபிள் டிவி முடங்கியுள்ளதாகவும், தொழில் நுட்ப கோளாறினை சரி செய்து நடவடிக்கை எடுக்க துறை அமைச்சரோ, முதலமைச்சரோ நடவடிக்கையும் எடுக்கவில்லை அதை பற்றி கவலை படவில்லை என்றும், திமுக குடும்பத்திற்கு அரசு கேபிள் டிவியை நடத்துவதற்கு ஸ்டாலின் அரசு முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர் குறிப்பிட்ட சேனல்கள் வீடு வீடாக சென்று அரசு கேபிள் டிவியை அகற்றி விட்டு டிஷ் வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜியோ நெட்வொர்க் உள்ளிட்ட தனியார் நெட்வொர்க் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.


பத்திரிகை வைத்துகொண்டு கட்சியை நடத்தி விடலாம் என நினைத்து விட வேண்டாம் எனவும்,  பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்களோ அதனை தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என கூறினார். ஆளுநரை சந்தித்து திமுகவின் 18 மாத கால ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை , தாராளமாக போதை விற்பனை குறித்து புகார் அளித்துள்ளததாகவும், நம்ம ஊர் சூப்பர் என்ற விளம்பர பதாகை அனைத்து கிராமங்களிலும் வைக்க வேண்டும் என்றும் அதனை பிரிண்ட் குறிப்பிட்ட அச்சு நிறுவனத்தில் பிரிண்ட் செய்ய வேண்டும் எனவும் இதற்கு 7906  ரூபாய் ஊராட்சி நிதியிலிருந்து பெறப்படுவதன் மூலம் ஊழல் நடைபெறுவதாகவும் இதில் விசாரனை நடத்த வேண்டும் தெரிவித்தார்.


தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளதாகவும், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எங்கையும் மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை கொரனோவை சிறப்பாக கையாண்ட அரசாக அதிமுக இருந்தது.  திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏன் மருந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றால் ஒப்பந்தபுள்ளிகள் கமிஷன் வாங்குவதற்காக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கும் போது அரசுக்கு மருந்துகள் ஏன் கிடைக்கவில்லை என நீதிமன்றமே பதில் கூற கூறிவிருப்பதாகவும் இதனால் தான் தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்வதாகவும், சாராய ஆலையிலிருந்து சாராய பாட்டில்கள் கலால் வரி ஒட்டப்படாமல் கடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.


சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூரில் பார் நடத்துவதற்கு தேதி முடிவடைந்த பிறகும் மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், அப்படி விற்பனை செய்யபடும் பணம் தமிழக முதலமைச்சருக்கு செல்வதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ஆடு மஞ்சலில் குளிபாட்டப்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் அவர் வெட்டபடுவார் என கூறினார். கனியாமூர் பள்ளி தாக்கப்பட்ட சம்பவத்தில் பசு மாட்டின் காம்பு அறுக்கபட்டுள்ளது காவல் துறையின் கையாளாக தனமாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுபேற்றதிலிருந்து ஊழல் மலிந்திருக்கிறது மக்களை ஏமாற்றி கொண்டிருக்க அரசாக உள்ளது.


என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என ஸ்டாலின் ஆட்சி செய்து வருவதாகவும் டிடிவி தினகரன் கட்சி நடத்தாமல் கோஷ்டி வைத்து நடத்தி வருகிறார் அவர் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமியை நம்பி சென்றால் நடுதெருவிக்கும் செல்ல வேண்டி இருக்கும் என்று இன்று டிடிவி தினகரனை நம்பி சென்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவாயிற்று திமுகவில் போய் இணைந்துள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மறைந்த பின் கட்சியை காப்பாற்றினார் எம்எல்ஏவாக கூட ஆக முடியாத டிடிவி தினகரன் எங்களை பற்றி கூற தகுதியில்லை. ஆட்சி மீது குறை சொல்ல மட்டும் அல்ல ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஒப்புதலை வழங்க வலியுறுத்தி ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி பாகுபாடு பாக்காம சென்றதாக கூறினார். ஆண்மைமிக்க , தைரியமிக்க அரசாக அதிமுக செயல்பட்டது. நாடக நடிக்கும் அரசாக திமுக உள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.