’’இந்த முறை நாம் தான் ஜெய்க்கணும்..ஒழுங்கா வேலை பாருங்க..சரி இல்லை என்று  தெரிந்தால் கட்சியை விட்டே தூக்கிருவேன்’’ என கோவை நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்துள்ளாராம் செந்தில் பாலாஜி. 2026 தேர்தலிலும் கோவை தொகுதியில் திமுகவுக்கு சாதகமான சூழல் இல்லை என்ற ரகசிய சர்வே தான் செந்தில் பாலாஜியின் இந்த ருத்ரதாண்டவத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

Continues below advertisement

செந்தில் பாலாஜி:

அமைச்சர் பதவியை இழந்தாலும் வரும் தேர்தலுக்கு கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜியே நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கரூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதையும் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் இம்முறை திருப்பூர் ஈரோடு என ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் இவரது கையில் தான் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சிறையில் இருந்துகொண்டே அனைத்து தொகுதிகளையும் ஜெயிக்க வைத்துவிட்டார் பாலாஜி என பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் இந்த முறை தலைமையின் ஆசைக்கிணங்க எப்படியாவது கொங்கு மண்டலத்தில் திமுக கொடியை நாட்டி விட வேண்டும் என சபதம் எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.

ரகசிய சர்வே:

பொதுவாக கொங்கு மண்டலம் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. 25 ஆண்டுகளாக திமுக அங்கு மண்ணை கவ்வி வருகிறது. இந்த முறையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்த பகுதியில் வலுவாகவே உள்ளது. இதனையடுத்து தொகுதி நிலைமையை ஆராயும்  நோக்கில் தொகுதி வாரியாக ரகசிய சர்வே ஒன்றை எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. ஆனால் அந்த சர்வே திமுகவுக்கு சாதகமாக வரவில்லை..இந்த தேர்தலிலும் கொங்கில் திமுக வீக்காக உள்ளது என முடிவுகள் வர, உள்ளூர் நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் பாலாஜி. 

Continues below advertisement

செந்தில் பாலாஜி வார்னிங்:

கோவை தெற்கு, வடக்கு, மாநகர் என மூன்று தொகுதிகளிலும் அடுத்தடுத்து மீட்டிங் வைத்து அதிரடி காட்டியுள்ளார். மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை தனித்தனியே பேசியுள்ளார். அப்போது கறாராக பேசிய பாலாஜி, இந்த தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும், சொந்த பிரச்சனை, தனிப்பட்ட பகை இந்த மாதிரி எந்த காரணங்களுக்காவும் கட்சிக்குள்ளே பிரச்சனை வரவே கூடாது. எல்லாரும் ஒழுங்க கட்சி வேலையை மட்டும் பாக்கணும்..அவங்க அவங்க பூத்துக்கு அவங்க தான் பொறுப்பு..ஜெய்ச்சு கொடுக்க முடியாட்டி இப்பவே எழுதி கொடுத்துட்டு போயிருங்க..அத விட்டுட்டு உட்கட்சி பூசல் செய்றீங்கனு தெரிஞ்சா கட்சியை விட்டே தூக்கிருவோம்..

கடந்த தேர்தலில் எஸ்பி வேலுமணியின் தொண்டாமுத்தூரில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டவர்களின் லிஸ்ட் உள்ளது.. இந்த முறை ஒழுங்க இருங்க..என நிர்வாகிகளுக்கு நேரடி வார்னிங் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.