மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக எம்.எல்.ஏ.வும், அமைப்பு செயலாளருமான செல்லூர் கே.ராஜூ..,” தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல தி.மு.க.,வினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் எம்.பி., இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். ஒன்றரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒட்டு வாங்க மட்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது, மதுரையில் ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் கூட்டணி நிரந்தரமானது அல்ல. தேர்தல் நேரத்தில் பாஜக உடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சி முடிவெடுக்கும். பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறி கொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறி செல்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும்”.
ஒற்றை தலைமை தொடர்பான கேள்விக்கு
இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாது ஒன்று. ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியை கொண்டு வந்துள்ளோம். ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்ல கூடாது என்பதே எங்கள் விருப்பம். காளிமுத்து, ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான். எனவே, எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம்.
முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பொறுப்பு தரவில்லை என வருத்தம் தெரிவிக்கிறாரே?
அண்ணன் பாஸ்கரன் என்றும் சிங்கம் மாதிரி, அவர் மீசையே தோரணைய அளிக்கும். அண்ணனுக்கும் கட்சி தலைமை கண்டிப்பா பொறுப்பு வழங்கும்.
ஜி.எஸ்.டி வரி குறித்த கேள்விக்கு !
ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்" என தெரிவித்தார்.