" தமிழர்  இல்லாத ஒருவரை ஆள்வதற்கு , வசதியாக திராவிடத்தை வைத்துக்கொண்டு , திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ” , இதுகுறித்து அன்பில் மகேஷ் என்னோடு பேச தயாராக இருக்கிறாரா, ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவோமா என சீமான் சவால் விடுத்துள்ளார். 


இந்தி விழா:


சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்றைய முந்தினம் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டது. 
இது , தமிழ்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து, ஆளுநரை விமர்சிப்பதா என பாஜக எம்.பி எல்.முருகன் உள்ளிட்ட பலரும் திமுகவினருக்கு கண்டனங்களை தெரிவித்தனர். 


சீமான் பேட்டி: நேற்று



இந்த நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது  “  நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த போது, வராத கோபம் 2 வரியை தூக்கியதற்கு கோபம் வருகிறதா என சீமான்  நேற்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


அன்பில் மகேஷ் பேட்டி:
 


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசிடம், சீமான் பேசியது குறித்து, இன்று  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அப்போது அவர் பேசியதாவது “ வேதனைக்குரியதாக இருக்கிறது, ஒரு தமிழனாய் இருந்துகொண்டு , இவ்வாறு பேசுவது தமிழ் மீது அவமரியாதையை காட்டுவது போன்றுதான் உள்ளது என அன்பில் மகேஷ் பேசினார். 


சீமான் பேட்டி: இன்று



இதையடுத்து , இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் பேசியதாவது “ எந்த இடத்தில் திராவிட நாடு உள்ளது, இலக்கியத்தில் இருக்கிறதா? ; தமிழர்  இல்லாத ஒருவரை ஆள்வதற்கு , வசதியாக திராவிடத்தை வைத்துக்கொண்டு , திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ” என சீமான் பேசினார்.


மேலும் , அன்பில் மகேஷ் என்னோடு பேச தயாராக இருக்கிறாரா, ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவோமா , நான் தமிழன், அதனால்தால் பேசுகிறேன், தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என சொல்லவில்லை , இது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்காது என சொல்கிறேன் என சீமான் பேசியுள்ளார். 
 
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து , திராவிடம் குறித்தான பேச்சு தமிழ்நாட்டு அரசியலில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 


Also Read: நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!