உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்பதையும், அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று நினைப்பதில்லை ஆகையால் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லை  என காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சசிகலா பேட்டியளித்தார்.

 

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா பங்கேற்று சாமி தரிசனம் செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் அவர்களின் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். 

 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சராகிவிட்டார் அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று அவர் இன்னும் நினைக்கவில்லை, ஆகையால் தான் அவர் பேச்சு குறிக்கிறது, தமிழகத்தில் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் சமமென நினைக்க வேண்டும். திட்டமிட்டு ஒரு பிரிவினரை சுட்டிக்காட்டி அதனை மலேரியா, டெங்கு கொசு போன்று அழிக்க வேண்டும் என கூறுகிறார், ஆகையால் அமைச்சராக இருக்கக்கூடிய தகுதி இல்லை. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் உண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணைவது நிச்சயம் சாத்தியமாகும்.

 

அரசியலுக்காக திமுகவினர்கள் கண்டதையும் பேசி, பிரச்சினையாக்கி அவர்களின் கையாளதங்காத திமுக அரசை உள்ள குறைகளை வெளிப்படுத்தாமல் இருக்க மக்களை திசை திருப்பி நிகழ்வு நடைபெற்று வருவதாக சசிகலா குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்து மதத்தினர் பகவத் கீதையும், இஸ்லாமியர்கள் குர்ஆனையும், கிறிஸ்தவர்கள் பைபிளையும் போற்றப்பட்டு அதில் உள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே சனாதனம். இதை தெரியாமல் திமுகவினர் பேசிக் கொண்டு வருகின்றனர். திமுக கட்சிக்காரர்கள் சரி செய்தால் மட்டுமே கொலை குற்றங்களை தடுக்க முடியும்.

 

அனைத்து காவல் நிலையங்களிலும் என்ன பாடுபடுகுறார்கள் என்ற தகவல் வருகிறது, திமுக கட்சிக் கரை வேட்டி கட்டிக் கொண்டு காவல் நிலையம் போனால் எப்படி வழக்கு போடுவார்கள்?. எல்லோரும் சொல்கிறார்கள் ஒன்னும் செய்ய முடியவில்லை. நாளை தேர்தல் சமயத்தின் பொழுது பணம் கொடுக்கிறார்கள் என கூறினால் அதற்கு தலை சாய்த்து விடக் கூடாது. 

 

நல்லபடியாக ஆட்சி நடத்த வேண்டும், அப்பொழுதுதான் தமிழக மக்கள் முன்னேற முடியும். அது போன்ற ஆட்சி என்றால், எங்களைத் தவிர வேறு யாராலும் தர முடியாது. மக்களுக்கு என் மீது இருக்கும் ஈடுபாடு எப்பொழுதும் ஒரே போல இருக்கும். ஆட்சியில் இல்லை என்றாலும், அந்த நினைப்பு எனக்கு இருக்கிறது. மக்கள் தான் சரியான பாடத்தை திமுகவினருக்கு புகட்ட வேண்டும் என்றார்.