மத்திய பட்ஜெட்  சாதகமும், பாதகமும் அடங்கியதாக இருக்கிறது என்று கூறி சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து சசிகலா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை உற்று நோக்கும்போது ஒரு சில சாதகங்களும், பாதகங்களும் நிறைந்த கலவையான நிதி நிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.


5.3 வேலை 60 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் வரை சுமார் கோடி பேர் வாய்ப்பு பெற வேண்டியுள்ளதாகவும் அதிலும் 1.7 கோடி பெண்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை நினைத்து பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கிறது. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.




இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் நம் விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்கும் நடவடிக்கையாக உரம், இடுபொருள்கள் போன்றவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வரவேண்டிய தேவை அதிகம் உள்ளது.


அதே போன்று, குறைந்தபட்ச ஆதரவு விலை" (MSP) பட்டியலில் இடம்பெற்றுள்ள 23 விவசாயப்பொருள்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவ்வாறு எந்த அறிவிப்பும் நிதி நிலை  டிஜிட்டல் கரன்சியால் அடித்தட்டு மக்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்று தெரியவில்லை. டிஜிட்டல் பணப்பரிமாற்றம் பற்றிய விழிப்புணர்வை முதலில் மக்களிடம் ஏற்படுத்திட வேண்டும்.




நதிநீர் இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதுஅனைவராலும் வரவேற்கக்கூடிய ஒன்றாகவும், இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் திட்டத்தின் பயனை முழுமையாக அடையமுடியும். மேலும், ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையில் இருக்கின்ற காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற நீர் பாசன மேலாண்மை பிரச்சனைகளில் விரைந்து செயல்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.


இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த ஜவுளியில் சுமார் 55 சதவிகித நூல் உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு தமிழகத்தில் நடைப்பெற்று வருகிறது. தற்போது, வரலாறு காணாத அளவில் நூல் விலை உயர்ந்துள்ளதால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிப்படைந்து, தமிழகத்தில், சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை இழக்கும் அபாயம் உள்ளதாலும், மேலும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினருடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்ற நிலையில், நூல் விலை ஏற்றத்தினை கட்டுப்படுத்தும் விதமாக பஞ்சுக்கான 11 % இறக்குமதி வரியை நீக்கிடவேண்டும் என்று தமிழக விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டி கோரிக்கை வைத்து எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மேலும், இதனை GST கூட்டமைப்பிலும் விவாதித்து, தங்களது நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். அதே போன்று, ஒரு சிலர் பஞ்சு மற்றும் நூலைப் பதுக்குவதால், நூல் கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியும், நூல் கட்டுப்பாடு சரியாகும்வரை நூல் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்து, உள்ளூர் தட்டுப்பாடு சரியாகும்வரை, நூல் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்து, உள்ளூர் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.


One Nation One Registration" என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்து இருக்கும் நிலையில் இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், இதனால் மாநில அரசுகளின் உரிமை பாதிக்கப்படலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.மத்திய அரசு எல் ஐ சி பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்து இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.