மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நேற்று ஆஜராகி பரபரப்பான வாக்கமூலம் அளித்தார். 


அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஆறுமுகசாமி ஆணையத்தில் உண்மையான பதில் அளித்துள்ளேன். ஜெயலலிதா மரணம் குறித்து அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்துள்ளேன். அதோடு, எதிர்தரப்பு என்னிடம் கேட்ட கேள்விக்கும் உரிய மற்றும் உண்மையான பதிலை அளித்துள்ளேன்.




ஆணையம் அமைக்கப்பட்டு எனக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவரங்களை கூறுகிறேன். 12.12.2018ம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டு 20.12.2018ம் ஆண்டு ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. ஆறுமுகசாமி ஆணையம் எனக்கு 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், பட்ஜெட் மற்றும் சொந்த காரணங்களால் என்னால் நேரில் ஆஜராக முடியவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் முரணாக பதில் எதுவும் கூறவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அன்றும், இன்றும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது” என்று கூறினார்”






இந்நிலையில், இன்று சென்னை தி-நகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “என் மீது மதிப்பு இருக்கிறது என உண்மையை சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு தெரிந்து உண்மையை நேற்று மக்களும் தெரிந்து கொண்டுள்ளனர்” என தெரிவித்திருக்கிறார். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண