கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாபின் மனைவியும், பாஜக எம்.எல்.ஏவுமான ரிவாபா ஜடேஜா பொது நிகழ்ச்சி ஒன்றில் கோபமடைந்து கத்திய வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 


ஜாம்நகர் நகரின் லகோட்டா ஏரியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரமான 'மேரி மதி, மேரா தேஷ்' நிகழ்ச்சியின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜாம்நகர் எம்பி பூனம் மேடம், ஜாம்நகர் மேயர் பினாபென் கோத்தாரி ஆகியோருடன் பாஜக எம்எல்ஏ ரிவாபா ஜடேஜாவும் நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால், எம்எல்ஏ ரிவாபா ஜடேஜாவுக்கும், மேயர் பினாபென் கோத்தாரிக்கும் இடையே சில பிரச்னையில் மோதல் ஏற்பட்டது. 


என்ன நடந்தது..? 


சுதந்திரத்திற்காக போராடி மறைந்த தேசத்தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் " மெரி மிட்டி மேரா தேஷ் "  நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மறைந்த தேசத்தலைவர்களுக்கு முதலில் எம்.பி பூனம்பென், தனது காலில் அணிந்திருந்த காலணிகளை கழட்டாமல் மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர், ரிவாபா  தன் காலணிகளை கழற்றி மரியாதை செலுத்தியுள்ளார். இவரை தொடர்ந்து, மற்ற தலைவர்களும் தங்கள் காலில் இருந்து காலணிகளை அகற்றி மரியாதை செய்தனர். 


இதை பார்த்த எம்பி பூனம் பென், எம்.எல்.ஏ ரிவாபாவை கிண்டல் செய்யும் வகையில் “ஓவர் ஸ்மார்ட்” என சொல்லியுள்ளார். மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்கள் கூட தங்கள் காலணிகளை கழட்டுவதில்லை. ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே அதீபுத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள்” என ரிவாபாவை பார்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. 






இதை கேட்டு ஆத்திரமடைந்த ரிவாபா, எம்பி பூனம்பென்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த நகர் மேயர் பினா கோத்தாரி ரிவாபாவிடம், “தேவையில்லாமல் அனைத்திற்கு மூக்கை நுழைக்காதீர்கள், உங்கள் லிமிட்டிற்குள் இருங்கள்” என்று கத்தியுள்ளார்.


எம்பிக்கு ஆதரமாக மேயரும் பேசியதால், மேலும் ஆத்திரமடைந்த ரிவாபா அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். அந்தநேரத்தில் அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் ரிவாபாவையும், மற்ற பெண் தலைவர்களையும் சமாதானப்படுத்தியுள்ளார். 


வாக்குவாதத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிவாபா ஜடேஜா, “ நான் எனது காலணிகளை கழற்றும்போது, நாட்டின் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கூட இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வரும்போது செருப்பைக் கழற்ற மாட்டார்கள். ஆனால் புத்திசாலிகள் தங்கள் காலணிகளைக் கழற்றுகிறார்கள் என எம்பி என்னை பேசினார். அவரின் இந்த பேச்சு என்னை ஆத்திரப்படுத்தியது. சுயமரியாதை விஷயத்தில் என்னைப் பற்றிய இதுபோன்ற கருத்துகளை என்னால் கேட்க முடியாது. ” என்றார்.