தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அல்லு அர்ஜூன் பெற்றிருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலம் அடைந்தது. ஆனால், இந்த வசனத்தால் ஆந்திரா மாநில அரசவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 பட வசனத்தால் சர்ச்சை
ஒரு படத்தின் வசனம் இந்த அளவிற்கு மோதலை ஏற்படுத்தும் என்றும் யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தனிப்பட்ட ஈகோவாக மாறியிருக்கிறது. அண்மையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தொண்டர் ஒருவர் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற வசனமான ரப்பா ரப்பா நறுகுதம் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை பிடித்திருந்தார். இதற்காக போலீசார் அந்த தொண்டரை கைது செய்தனர். ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனத்திற்கு ஒரு ஒரு தலையாக வெட்டப்படும் என்பது பொருள் ஆகும்.
ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு
பதாக ஏந்திய தொண்டர் கைது செய்யப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் கோபத்துடன், இந்த நாட்டில் புஷ்பா படத்தின் வசனத்தை சொல்ல கூட சுதந்திரம் இல்லையா? அந்த வசனத்தை கூறுவதில் என்ன தவறு. புஷ்பா போல் சைகை காட்டினாலும் தவறு என்றால் இதில் எங்கு சுதந்திரம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று விமர்சித்திருந்தார். ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் ஜெகன் மோகனை கடுமையாக விமர்சித்தாலும், பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் விமர்சனம்
புஷ்பா 2 படம் வெளியான போது எழுந்த சர்ச்சையை காட்டிலும் இப்படத்தின் வசனம் ஆந்திர அமைச்சரவையே கதிகலங்க வைத்திருக்கிறது. இன்னும் அணையா நெருப்பாக எரிந்துக்கொண்டிருக்கிறது. புஷ்பா என்றால் ஃபயர் என்பது போல் புகைந்து கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில், நீங்கள் உங்களது தொண்டரை பாதுகாப்பதன் நோக்கம் என்ன? நீங்கள் அவர்களை ஆடுகளை போல படுகொலை செய்வீர்களா? இந்த அணுகுமுறை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. உங்களது மனப்பான்மை ஆபத்தை தருவது போல் இருக்கிறது எனக் கூறி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.