ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே மார்ச் மாதம் 14ஆம் தேதி அதாவது இன்று, காங்கிரஸ் தலைவர் தனது சமீபத்திய உரைகளில் பலமுறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குறிவைத்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும் மற்றும் சமூகத்தில் உள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
ஒரே பாலின திருமணம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறது என்றும், எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையே மட்டுமே திருமணம் நடைபெற முடியும் என்றும் ஹோசபாலே கூறினார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) எதிராக ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு, ஹோசபாலே "அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக" ராகுல்காந்தி அப்படி செய்திருக்க வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அரசியல் துறையில் வேலை செய்யாது, சங்கத்துடன் தனக்கு எந்தப் போட்டியும் இல்லை என்றார்.
"ஒரு அரசியல் கட்சித் தலைவராக, அவர் மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும் மற்றும் சமூகத்தில் உள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் 'அகில பாரதிய பிரதிநிதி சபா'வில் செய்தியாளர் கூட்டத்தில் ஹோசபாலே கூறினார்.
லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர், “இந்தியாவை சிறைச்சாலையாக மாற்றியவர்களுக்கு நாட்டில் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்க உரிமை இல்லை” என்றார். முஸ்லீம்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குமான தொடர்பு பற்றிய கேள்விக்கு, ஹோசபாலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் முஸ்லிம் அறிவுஜீவிகளையும் அவர்களின் ஆன்மீகத் தலைவர்களையும் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டுமே சந்திக்கிறார்கள் என்றார்.