இங்கிலாந்துக்கு சென்ற ராகுல் காந்தி, புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். முன்பு தாடியுடன் முகம் வறண்டு போய் தோற்றம் அளித்த ராகுல் காந்தி, தாடியை ட்ரிம் பண்ணியும், முடி வெட்டியும் ஸ்டைலாக தோற்றம் அளித்தார்.


கேம்பிரிட்ஜில் ராகுல் காந்தி:


தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, "21 ஆம் நூற்றாண்டில் கேட்க - கற்றுக்கொள்வது" என்ற தலைப்பில் உரையாற்றினார்


அப்போது, இஸ்ரேலிய நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவுச் செயலியான பெகாசஸ் மூலம், தனது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டதாக மத்திய அரசை, குற்றம் சாட்டினார்.


தனது தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்படுவதாகவும், அதனால் கவனமாக பேசுமாறும், உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்ததாகவும் தெரிவித்தார். ”என் தொலைபேசியில் மட்டுமல்ல பல அரசியல்வாதிகள் மற்றும் நீதித்துறையைச் சார்ந்தவர்களின் தொலைபேசிகளிலும் பெகாசஸ் இருந்தது.






ஜனநாயகத்தின் மீது தாக்குதல்:


ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் நீதித்துறை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. 


இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களும், பத்திரிகைகளும் தாக்கப்படுகின்றனர்.


இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலை, நாங்கள் எதிர்கொள்கிறோம். 


பாரத் ஜோடோ யாத்திரையை குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்த யாத்திரை தன்னை ஒரு அரசியல்வாதியாக மாற்றியுள்ளது. கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் நடைபயணம் மேற்கொண்டோம்” என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.