Rahul Gandhi's Sikh Comment In USA : அமெரிக்காவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  சீக்கியர்கள் குறித்து  ஆபத்தான கதையைப் பரப்புவதாக பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.


அமெரிக்காவில் ராகுல் காந்தி:


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் உரை நிகழ்த்தினார். அப்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக குறித்து கடுமையான விமர்சனனகளை வைத்தார்.


”சீக்கியர்கள் தலைப்பாகை அணிய முடியுமா”.?


ஆர்எஸ்எஸ் சில மாநிலங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சமூகங்களை மற்றவர்களை விட தாழ்வாகக் பார்க்கிறது. அங்கு நடைபெறும் சண்டையானது அரசியலுக்கானது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு, ஒரு சீக்கியர் தனது தலைப்பாகையை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பது பற்றியது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்றும் ராகுல் காந்தி கூறினார். 




பாஜக கடும் கண்டனம்:


ராகுலின் இந்த கருத்தானது, பாஜகவினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில்”  நமது ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை உள்ளிட்ட சில முக்கியமான விசயங்களில் ஆபத்தான கட்டமைப்பை உருவாக்குகிறார், ராகுல் காந்தி. அவர் உண்மைகள் தெரியாமல் பேசுகிறார்.


காங்கிரஸ் ஆட்சியில் 1984 ஆம் ஆண்டு கலவரத்தின் போதுதான் சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் கடா அணிவதற்கு பயந்ததனர்.  அப்போது 3000 மக்கள் கொல்லப்பட்டனர். பலர் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் சீக்கியர்கள் பதட்டத்தையும் பாதுகாப்பின்மையையும் உணர்ந்தனர்.




படம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 


மேலும் அவர் கூறுகையில், தான் தலைப்பாகையுடன் நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறேன், ராகுல் காந்தி குறிப்பிட்டதைப் போன்ற நிகழ்வை ஒருபோதும், நான் சந்தித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை ஹர்தீப் சிங் பூரி கூறினார்.


ராகுலுக்கு ஆர்.பி.சிங் சவால்:


பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் எச்சரிக்கை தெரிவிக்கையில், “ காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,  டெல்லியில் 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர், அவர்களின் தலைப்பாகைகள் கழற்றப்பட்டன, அவர்களின் தலைமுடி வெட்டப்பட்டது, அதுகுறித்து எல்லாம் ராகுல் காந்தி பேசவில்லை.


ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன்" சீக்கியர்களைப் பற்றி அமெரிக்காவில் பேசியதை, இந்தியாவில் திரும்பத் சொல்லுமாறு என தெரிவித்தார். இந்தியாவில் இதுபோன்று பேசினால், நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன். நான் அவரை நீதிமன்றத்திற்கு நிறுத்துவேன்" என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.