மாநிலம் தழுவிய போராட்டம்


புதுச்சேரி: மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, என். ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து தேர்தல் சந்தித்தோம், மறு புறம் மக்கள் விரோத ஆட்சி நடத்திய திமுக - காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டது, அதில் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நம்பிக்கையை பெற்று வெற்றி பெற்று நல்லாட்சி நடத்தி வருகிறது. மாநில அந்தஸ்து விவகாரத்தில், மாநில அந்தஸ்து இல்லாததால் தனக்கு ஏற்படும் நெருடல்கள் குறித்து பேசியுள்ளார், இதற்காக எதிர்கட்சிகள் எதிர் மறையான கருத்தை பதிவு செய்து, முதல்வரை அசிங்கபடுத்தும் படி பேசினர்.


வையாபுரி மணிகண்டன் கூறியது அதிமுகவின் கருத்து இல்லை;


மேலும் அதிமுகவின் வையாபுரி மணிகண்டன் முதல்வர் பதவி விலக வேண்டும் என கூறி இருந்தார், அதிமுகவை பொருத்த வரை எந்த முடிவையும் எங்கள் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே எடுப்பார், வையாபுரி மணிகண்டன் கூறியது அதிமுகவின் கருத்து இல்லை, அவருடைய தனிப்பட்ட சொந்த கருத்து. அவரவர் விருப்ப வெருப்பிற்கேற்ப கூட்டணியில் கருத்து சொல்வது எதிர் அணியினருக்கு வலு சேர்க்கும், இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். முதல்வரை மாற்ற வேண்டும், தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்வது என்பது தவறு.


எதிர்க்கட்சி தலைவர் சிவா, தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதை மறந்து அவமரியாதையுடன் நடந்துள்ளார் 


புதுச்சேரி மாநில எதிர்கட்சி தலைவர் சிவா தான் ஒரு எதிர் கட்சி தலைவர் என்பதை மறந்து விட்டு அரசு துறையில் உள்ள பெண் அதிகாரியை மிரட்டி அவமரியாதையுடன் நடந்துள்ளார், அதிகாரிகளை மிரட்டுவது ஆணவத்தின் உச்சம். எனவே தலைமை செயலாளர் சம்மந்தப்பட்ட பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தி, தவறு நடந்து இருந்தால் எதிர்கட்சி தலைவர் மற்றும் அவருடன் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு பெண்ணாக துணைநிலை ஆளுநர் தமிழிசை பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதையை சரி செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். புதுச்சேரியை பொருத்த வரை துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலோ, களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ செயல்பட கூடாது. என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.