புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மக்கள் நல திட்டங்களை அதிகாரிகள் தடுப்பதாக முதல்வர் ரங்கசாமி கூறிய கருத்து தொடர்பாக பேசினார்.   பாஸ்ட் புதுச்சேரியாக புதுச்சேரி முன்னேறி வருகிறது முன்னெறி வருகிறது. இதற்கு முந்தைய காலகட்டத்தை விட இந்த காலகட்டத்தில் மத்திய அரசும் சிறப்பாக துணை நிற்கிறது. மாநில அரசும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதனால் புதுச்சேரி மக்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நான் சொல்கிறேன். யார் என்ன விமானங்கள் வைத்தாலும் நான் மக்களுக்கான கோப்புகள் எதுவாக இருந்தாலும் அதை புறம் தள்ளுவது இல்லை. நான் துணைநிலை ஆளுநராக வரும்போது பென்ஷன், உதவித்தொகை பல கோப்புகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதையெல்லாம் ஒன்றொன்றாக நிறைய தீர்வு செய்துள்ளோம். அதுமட்டுமின்றி இன்று 1400 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கொடுப்பதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி வருவது குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது விளக்கமளித்த அவர், முதல்வர் தனக்கு என்ன சிரமம் இருக்கிறதோ அதை சொல்லிவிட்டார். அதிகாரிகள் சில பிரச்சினைகளினால் காலதாமதம் செய்வதாக குறிப்பிட்டார். அதுயெல்லாம் சரி செய்யப்படும். நான் இன்று புதுச்சேரிக்கு வந்துள்ளேன். நாளை நான், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் அமர்ந்து எங்கே காலதாமதம் ஆகிறது என்பதை கண்டறிந்து சரி செய்துவிடுடோம்.


இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. இது சகோதர சகோதரிகளுகள் வரும் பிரச்சினை தான், இது வீட்டிற்குள் இருக்கின்ற சின்ன சின்ன சம்பவம் தானே தவிர இதில் மக்களை பாதிக்கும் பிரச்சினை எதுவுமே ஒன்றும் நடக்கவில்லை. என்னுடைய மனசாட்சி படி புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய முடிகிறதே என்று எனது வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் ஒரு கோப்பு வந்ததென்றால் அதை நான் கோப்பாக பார்ப்பதில்லை. மக்கள் நலன் சார்ந்த மக்களின் முகமாகத்தான் பார்க்கிறேன்.


மக்கள் நல திட்ட கோப்புகள் தவிர்த்து சில கோப்புகள் மக்களை பாதிக்கிறது என்பதால் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சில கட்டணங்கள் மக்களை பாதிக்கிறது என்றால் அதை தடுத்திருக்கிறோம். எல்லா விதத்திலும் மக்கள் பாதிக்கிறார்கள் என்ற அளவிற்கு எதுவுமே நடத்தவில்லை. புதுவை சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கிறது. நல்லாட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு எல்லா விதத்திலும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.


முதல்வர் மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சலில் இருப்பதாகவும், மாநில பெற மத்திய அரசு பெற மத்திய அரசு புறக்கணிப்பதாக வெளிப்படையாக சொல்லியது குறித்து தமிழிசையிடம்  கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், மாநில அந்தஸ்து என்பதை நான் இப்போது பதில் சொல்லவில்லை. ஏனென்றால் இந்த மாநில அந்தஸ்து சொல்கிறார்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்கள் தான்.


முதலமைச்சர் அவரது ஆசையை வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் சொல்வதை நான் சொல்கிறேன். என்னை பொறுத்தவரை மாநில அந்தஸ்த்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அது இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். முதல்வர் சொல்வதால் நான் சொல்லவில்லை. யாரையும் மன உளைச்சலில் வைக்க கூடாது என்பது தான் எனது கொள்கையாக உள்ளது. முதல்வர் ஏன் மன உளைச்சலாக இருக்கிறார் என்பதை நேரடியாக கேட்டு அதில் எதாவது பிரச்சினை இருந்தால் அதை உடனடியாக தீர்த்து வைக்க கூடிய மனநிலை என்னிடம் இருக்கிறது. அதற்கான திறமையும் என்னிடம் இருக்கிறது.


உடனே அவர் அப்படி சொல்லிவிட்டார் என  ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வது போல அவரும் எனக்கும், மத்திய ஆட்சிக்கும் இங்குள்ள ஆட்சிக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. அண்ணன் தங்கச்சி, அக்கா தப்பிக்குள் வரும் பிரச்சினை தான் இது.  இதை வெளியில் யாரும் வந்து கொண்டாடுவதற்கு விட மாட்டோம்.


குறிப்பாக துணை நிலை மாநிலங்களுக்கு சில அதிகார பகிர்வு இருக்கிறது. அதற்கென்று ஒரு கொள்கை, வழிமுறை, நெறிமுறை இருக்கிறது. அதை தீடிரென்று மாற்றிவிட முடியாது. ஆனாலும் மற்ற ஆளுநர்கள் போல அதிகாரத்தை நிச்சயமாக நான் பயன்படுத்தவில்லை. நான் அன்பாகவும் மக்களுக்கு வேண்டியதை தான் செய்து கொண்டிருக்கின்றேன். அதற்காக நீதிமன்ற உத்தரவுகள், மற்றும் சில முடிவுகளை மத்திய உள்துறையிடம் கேட்டுவிட்டு தான் எடுக்க முடியும். அது எந்த ஆட்சியிலும் சரி துணைநிலை மாநிலத்திற்கென்று உள்ள வரைமுறையை மீற முடியாது. ஆனால் அந்த வரைமுறையில் மக்களை பாதிக்கும் எதையும் நாங்கள் அனுமதிக்கவில்லை” என்றார். முதல்வர் தான் அனுப்பும் கோப்புகளை அருகாமையில் இருக்கும் நபரே தடுத்து நிறுத்துவதாக கூறியது குறித்து ஆளுநரிடம் எழுப்பிய கேள்விக்கு, "எதற்கு அப்படி பேசினார் என்று அவரிடமே கேட்கிறேன்," என்று பதிலளித்தார்.