தமிழ்நாடு, புதுச்சேரியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்கிறார்.

Continues below advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை கோவைக்கு விமானத்தில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் செல்கிறார். தாராபுரம் கூட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தபின் அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, தாராபுரத்தில் சுமார் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola