Prashant Kishor: 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவரால் மாநிலத்தை எப்படி? தேஜஸ்வியை கடுமையாக தாக்கிய பிரசாந்த் கிஷோர்

Prashant Kishor- Tejashwi: ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவால் காகிதத்தை பார்த்து படிக்காமல் ஐந்து நிமிடம் சோசலிசம் பற்றி பேச முடியுமா என பிரசாந்த் கிசோர் சவால் விடுத்துள்ளார்.

Continues below advertisement

Prashant Kishor- Tejashwi: 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத பீகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவால் , எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று  தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

தேஜஸ்வி யாதவ் மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு:

ஜன் சூராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், பீகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சித்துள்ளார் செய்தார்.

பீகார் மாநிலம் போஜ்பூரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர், 9வது வகுப்பில் தோல்வியடைந்த அரசியல்வாதியால், மாநிலத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.

“ பணம் மற்றும் செல்வாக்கு இல்லாத காரணத்தால் ஒருவரால் கல்வி கற்க முடியவில்லை என்றால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒருவரின் பெற்றோர் முதலமைச்சராக இருந்தும், அவரால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், இது அவர்களின் கல்வியின் மீதான அணுகுமுறையை காட்டுகிறது.

தேஜஸ்வி யாதவால், காகிதத்தை பார்த்து படிக்காமல் ஐந்து நிமிடம் சோசலிசம் பற்றி பேச முடியுமா எனவும் சவால் விடுத்தார். அவருக்கு (தேஜஸ்வி யாதவ்) ஜிடிபிக்கும், ஜிடிபி வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்கூட தெரியாது, பீகார் எப்படி மேம்படும் என்று அவரால் சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

தேஜஸ்வி யாதவ், பீகாரின் முன்னாள் முதல்வராக இருந்த தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் பாரம்பரியத்தை நம்பியிருக்கிறார். அவர் தகுதியின் அடிப்படையில் தலைவராக இருக்க முடியாது என்றும் கூறினார்.

2025ல் ஆட்சி: 

அவர் தேஜஸ்வியை விமர்சித்த அதே வேளையில், 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி எப்படி இருக்கும் என்ற நம்பிக்கையையும் கிஷோர் வெளிப்படுத்தினார். "2025 ஆம் ஆண்டில், ஜான் சுராஜ் கட்சியின் முதல்வர் பதவியேற்பார், மேலும் ஜான் சுராஜின் அரசாங்கம் இருக்கும் என கூறினார்.

மேலும் வரும் பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இவர்களில் 40 சட்டசபை தொகுதிகளில் பெண் வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்கப்படும் என்றும். இதற்குப் பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வாய்ப்பு அளித்தால், 2030 சட்டசபைத் தேர்தலில், 70 முதல் 80 இடங்களில் பெண் வேட்பாளர்களை அவரது கட்சி நிறுத்தும் என்றும், இம்முறை 40 முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்க உள்ளனர் என பிரசாந்த் கிசோர் தெரிவித்துள்ளார்.

Also Read; DK Sivakumar: மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக பயன் - டி.கே.சிவக்குமார்

Continues below advertisement
Sponsored Links by Taboola