“விஜயை எதிர்த்துப் போட்டி’ அதிரடியாக அறிவித்தார் பிரபல நடிகர்..!

'2026 தேர்தலில் என்னைப் போட்டியிட வைக்க பெரிய பெரிய கட்சிகள் முயன்று வருகின்றன - நிஜத்தில் காமெடி செய்த பவர் ஸ்டார்’

Continues below advertisement

மகுடம் விருதுகள்

Continues below advertisement

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக  "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

தொழில் முனைவோர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள், ஊடக நண்பர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.  இவ்விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை ரேகா, நடிகர் பவர் ஸ்டார் , சின்னத்திரை நடிகர் டெலிபோன் ராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு இவ் விருதினை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் பவர் ஸ்டார் ,

2026 தேர்தலில் நிற்பதற்கு ஒரு பெரிய கட்சிகள் என்னை கூப்பிட்டு இருக்கிறார்கள். நடிகர் விஜயை எதிர்த்து தான் நான் நிற்பேன் என்று கூறியுள்ளேன். அவருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறவில்லை காலப் போக்கில் அது தெரிய வரும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் , பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர் பண்பான மனிதர் கட்சியை நன்கு வலப்படுத்துவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது..

பவர் ஸ்டாலின் பலம்

சினிமாவில் பல்வேறு நடிகர்கள் இருந்தாலும் திரை காமெடியிலும் நிஜ காமெடியிலும் கலக்கி வருபவர் பவர் ஸ்டார். எப்போதும் சிரித்த முகமாக பற்களை காட்டிக்கொண்டு மகிழ்ச்சி பொங்க இருக்கும் அவர் விஜயை எதிர்த்து எந்த பலத்தை கொண்டு போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தாலும், அவரை பயன்படுத்தி விஜயை விமர்சிக்க வைக்க பல கட்சிகளும் முயன்று வருவதாக அவரே கூறி வருகிறார்.

இப்பொழுது மூன்று படம் எனக்கு சூட்டிங் போயிட்டு இருக்கு , பெண்கள் குறித்து தவறான செய்தி வருவது ஒரு சிலர் செய்யும் தவறு அரசு மேல் குற்றம் சாட்டுகின்றார்கள் அவர்களை தடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் பவர் ஸ்டார். இவர் கண்ணா லட்டு திங்க ஆசையா படம் மூலம் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola