பாமக நிறுவனர் ராமதாஸ் தான் அன்புமணியை அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ”தர்மபுரியில் நடைபெற்ற கூட்டதில் அன்புமணி ஒரு மாதகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஏன் இந்த பதவி இறக்கம் என பேசியிருந்தார்.
இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிகாரர்களை திசை திருப்பும் முயற்சியாகும் தான் செய்த தவறுகளை மறைக்க அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார்.
தவறு செய்தது அன்புமணி அல்ல:
அன்புமணி தன்னுடைய 35 வயதில் சத்தியத்தினை மீறி அவரை கேபினெட் அமைச்சராக்கினேன். தவறான ஆட்டத்தை அடித்து ஆடியது அன்புமணி தான் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகவில்லை என்று ராமதாஸ் பேசினார். புதுச்சேரியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை நாகரிகமே இல்லாமல் நடந்துகொண்டது யார்? எதோ போகிற போக்கில் நான் எதையும் சொல்லவில்லை எல்லாவற்றிக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது, வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைப்பது போல அன்புமணி என் மார்பில் பயந்துவிட்டார் என்றார்.
”அன்றே செத்துவிட்டேன்”
ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார். முகுந்தன் விவகாரத்தில் தனது தாய் மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்கினார். மேலும் அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார்.
அடம் பிடித்த அன்புமணி:
”2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணிக்கு கடிதம் எழுதினேன். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச சொன்னேன் ஆனால் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தார், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 6 அல்லது 7 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி எனது ஒரு காலையும் செளமியா ஒரு காலையும் பிடித்து அழுதனர்.
பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என அன்புமணி மிரட்டியதாக ராமதாஸ் கூறினார்.
அன்புமணி பேசியது என்ன?
தர்மபுரியில் கடந்த மே24 ஆம் நடந்த நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு பேசினார். ”அப்போது தான் ஒரு மாத காலமாக பயங்கர மன உளைச்சலில் இருந்தேன், எனக்கு உறக்கம் வரவில்லை, நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்,நான் ஏன் மாற்றப்பட்டேன்? அப்படி என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று பேசியிருந்தார். ”