ஸ்டாலினை பாத்து கத்துக்கோ என்று அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ள  நிலையில், திமுக கூட்டணியில் இணைவதற்கு மீண்டும் ராமதாஸ் தூதுவிட்டுள்ளது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

அன்புமணி-ராமதாஸ் மோதல்:

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவிவருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத  நிலையில் பாமகவில் தந்தை மகனுக்கு இடையிலான மோதல் போக்கு தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அன்புமணி ஒரு பக்கம் ராமதாஸ் ஒருபக்கம்  இருப்பதால் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வியும் அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. 

உறுதியாகத கூட்டணி:

முன்னதாக அண்மையில் தமிழ்நாடு வந்த அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால், கடந்த நாடளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்த பாமக இந்த முறை அதிமுக - பாஜக கூட்டணி உறுதி ஆகியுள்ள சூழலில் தங்களின் கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. ஆனால், பாஜக தரப்பு தொடர்ந்து பாமகவிடம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக சொல்லப்படுகிறது. 

மீண்டும் திமுக கூட்டணி?

ராமதாஸ் எந்த கூட்டணிக்கு செல்ல இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதி மூச்சு வரை நான்தான் செயல்படுவேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஸ்டாலினை பாத்து கத்துக்கோ என்று அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இணைவதற்கு மீண்டும் ராமதாஸ் தூதுவிட்டுள்ளது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. வன்னியர் சங்க மா நாட்டில் கூட தம்பி ஸ்டாலின் என்று தான் ராமதாஸ் பேசினார்.                                                           தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் விமர்சனம் செய்து வரும் நிலையில்  திமுக விவகாரத்தில் ராமதாஸ் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். அன்புமணி திமுகவை விமர்சனம், செய்து வரும் நிலையில் ராமதாஸ் இந்த போக்கை கடைபிடிப்பது வேறு  கூட்டணியில் இருவரும் செல்ல போகிறார்களா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.