தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி என்பவர், நேற்று துணை முதலமைச்சர் உதயநிதியை சந்ததித்துவிட்டு, தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டார். இந்த நிலையில், கட்சி விட்டு கட்சி தாவி வருபவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட, திமுகவிற்காக களத்திலும் சோசியல் மீடியாவிலும் சண்டை போடுபவர்களுக்கு இல்லை என்று திமுகவினர் புலம்பிவருகின்றனர்.

தவெகவை விட்டு திமுகவில் இணைந்த வைஷ்ணவி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகி அண்மையில் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணைந்தவர் தான் வைஷ்ணவி. தனது அம்மா திமுகவில் பொறுப்பில் இருப்பதை பயன்படுத்தி திமுகவில் தனக்கும் ஒரு பதவி வேண்டும் என்ற முனைப்பில் அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த வைஷ்ணவி, அந்த பதிவுகளை எல்லாம் திமுகவில் சேர்ந்த பின்னர் டெலிட் செய்தார். தற்போது தவெக-வையும், அதன் கட்சித் தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

புகைப்படத்துடன் வைஷ்ணவி போட்ட பதிவு

இந்த நிலையில் தான், நேற்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தனது தாயாருடன் சென்று, துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்தார் வைஷ்ணவி. அந்த சந்திப்பின் போது, உதயநிதிக்கு பெரியார் இன்றும் என்றும் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கி, மாண்புமிகு துணை முதல்வரும், கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி அண்ணன் அவர்களை சந்தித்தபோது என பேட்டு, “இளைஞர் மற்றும் இளம் பெண்கள் இன்றைய அரசியல் களத்தில் மக்கள் பணிகளை முன்னெடுக்க பல ஆலோசனைகளை வழங்கினார். என்னுடைய பணி சிறக்க வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டேன். செந்தில் பாலாஜி அண்ணனுக்கு நன்றி” என்ற பதிவை போட்டிருந்தார்.

திமுகவினர் கொந்தளிப்பு

தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், அதை பார்த்த திமுகவினர் பலரும், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜெயராமன் என்ற திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவில், இந்த வயதிலேயே மாற்றி மாற்றி பேசத் தெரிந்த கில்லாடி அரசியல்வாதி என்றும், இந்த பெண் இளந்தலைவரை சந்தித்தது, அதுவும் செந்தில் பாலாஜி என்ற மண்டல பொறூப்பாளருடன் சென்று சந்தித்தது, திமுக உடன்பிறப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மட்டும் இளந்தலைவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

அதேபோல், சஞ்சு சரவணன் என்ற பெண், போன மாசம் தவெக மேடைல புஸியாரை பார்க்க வாய்ப்பு கிடைக்கலைனு கட்சி மாறின பச்சோந்தி, இதுலாம் என்ன சாதிச்சுதுன்னு நேரா துணை முதல்வர்கிட்ட கொண்டு போய் நிறுத்திறாங்க..உண்மையா உழைக்கிற தொண்டர்களுக்கு இதுலாம் கடுப்பேத்தும்னு செந்தில் பாலாஜி போன்றோர் உணரவேண்டாமா? என்று கடுப்பாகி பதிவுகள் போட்டு வருகின்றனர் திமுகவினர்.

இந்தி நிலையில், வைஷ்ணவிக்கு கட்சியில் ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஏற்கனவே கொந்தளித்துள்ள திமுக தொண்டர்கள் வேறு மாதிரியான முடிவுகளை எடுத்துவிட்டால், அது கட்சிக்கு இழப்பாகிவிடும். திமுக தலைமை இதை யோசிக்குமா.?