சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், பாமக சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது பிரிவில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆறுதலையும் தெரிவித்தார்.
வீணாகும் உபரி நீர்:
பின்னர் ஆண்டுதோறும் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் வீணாகாமல் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும் என்றார். தர்மபுரி மாவட்டம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேபோல், கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயனடையும் வகையில் காமராஜர் துவக்கிய ராசிமணல் திட்டத்தையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
6000ரூ நிவாரணம் வேண்டும்:
மேலும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு அறிவித்த 2000 ரூபாயும் முழுமையாக பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்றடையவில்லை என்றார். கடந்த முறை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்காதவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் கொடுத்த அரசு பிற மாவட்டங்களுக்கு ரூ.2000 தான் கொடுக்கிறார்கள்.
இதையும் படிங்க: Sabarimalai : சபரிமலையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள்.விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த பலனுமில்லை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். தமிழ்நாடு அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என்று பாமக சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கி, மானியத்தில் வீடு கட்டி தர வேண்டும். எனவும் அனைத்து துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு திட்டங்கள் வேகமாக மக்களை சென்றடைய பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. சேலம் என்பது 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து பாமக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். தமிழக அரசும் வெள்ள நிவாரணத்திற்காக வழங்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஒரு கிக்கல் இருக்கு:
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல திட்டம்தான். ஆனால் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளது. சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்த மாநிலங்கள் உள்ளது. எனவே இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. நடைமுறை சிக்கல்களை நீக்கினால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நல்ல திட்டம் தான் என்று கூறினார்.