காவல்துறை மட்டுமல்ல ராணுவத்தை கொண்டு வந்தாலும் நிலத்தை எடுக்க விடமாட்டோம்... நெய்வேலியில் பாமக அன்புமணி ராமதாஸ் பேச்சு
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் மூன்றாவது சுரங்க அமைப்பதற்கு விருதாச்சலம், கம்மாபுரம், சேத்தியாதோப்பு, ஆகிய பகுதிகளில் 49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கைப்பற்றும் போதுமான அவர்களுக்கான இழப்பீடு தொகையை வழங்கவில்லை, அது மட்டும் இன்றி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, இதனை குற்றம்சாட்டி பாமக சார்பில் விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் நெய்வேலி அடுத்த சிறுவரம்பூர் என்ற கிராமத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற விவசயிகளிடமும்,பொதுமக்களிடமும் கருத்துகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அவர்,என்எல்சி நிறுவனம் தன் வளர்ச்சிப் பணிக்காக நெய்வேலி சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டு செல்கிறது, முதல் முறை என் எல் சி சுரங்கத்திற்கு ஆக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கவில்லை மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்கவில்லை.என்எல்சி நிர்வாகம் மூன்றாவது சுரங்கத்திற்க்காக உங்களிடமிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க விடமாட்டோம்,பாமக அதற்கு துணையாக நிற்கும்.
மேலும் என்எல்சி நிறுவனம் இந்த மாவட்டத்திற்கு வருகை தந்ததில் இருந்து இந்த மாவட்டம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.என்எல்சி நிர்வாகம் எப்படியாவது உங்களிடம் இருந்து நிலத்தை எடுத்து விடலாம் என அதிகாரத்தை பயன்படுத்த உள்ளது காவல் துறையை வைத்து நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது, காவல் துறை மட்டுமல்ல ராணுவத்தை கொண்டு வந்தாலும் நிலத்தை எடுக்க விடமாட்டோம் .என்எல்சி நிர்வாகம் நெய்வேலியிலிருந்து இனி ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க பாட்டாளி மக்கள் கட்சி விடாது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.
என்எல்சி நிர்வாகம் ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி வருகிறது ஆனால் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வாய்ப்பு தரவில்லை இனிமேல் என்எல்சி நிர்வாகத்தை நம்பி இருக்க விரும்பவில்லை நீ சுரங்கத்தை மூடி விட்டு செல்லலாம், திமுக அரசு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு வந்தபிறகு ஒரு பேச்சு பேசிக் கொண்டு வருகிறது.தற்போது நம்முடன் காடுவெட்டி குரு இல்லை காடுவெட்டி குரு இருந்திருந்தால் என்எல்சி இந்த நிலையை அடுப்பு அறிவிப்பை அறிவித்து இருக்கவே மாட்டார்கள். மேலும் இனி வரும் காலங்களில் என் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடைபெற உள்ளன.