சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 முதல் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் கட்சிகள். அந்த வகையில் திமுக கூட்டணி ஒருபக்கம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், அதனை வீழ்த்த அதிமுக- பாஜக வியூகம் அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பாக தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

Continues below advertisement

அதிமுக- பாஜக பேச்சுவார்த்தை 

அந்த வகையில் தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பியூஷ் கோயல், இணை தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,  முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி வியூகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இன்று காலை தமிழகம் வந்தனர். இதனையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள்  மத்தியில் பேசிய பியூஸ் கோயல், தேர்தல் பணிகளை நிர்வாகிகள் விரைவுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜகவிற்கு சாதகமான தொகுதிகள் பட்டியலையும் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய பியூஸ் கோயல் அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு இருக்கா என கேட்டதாகவும்,

விஜய் தமிழக தேர்தலில் ஒரு Spoiler

அதற்கு நிர்வாகிகள் வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் தமிழக தேர்தலில் ஒரு Spoiler ஆக இருப்பார் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் தவெகவால் பாஜக கூட்டணிக்கு வெற்றிக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும்  கூறப்படுகிறது. அதாவது தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து மீண்டும் திமுகவிற்கு வெற்றி ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்ற அர்த்தத்தில் பியூஸ் கோயல் பேசியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதற்காகவே விஜய் தமிழக தேர்தலில் ஒரு Spoiler ஆக இருப்பார் என பியூஸ் கோயல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவை பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது பாஜகவிற்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, எந்த எந்த தொகுதி, அதிமுக- பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.