மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. 11 மாத கால தி.மு.க., ஆட்சியில் அம்மாவின் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என மக்கள் குறை கூறுகின்றனர். தி.மு.க., சாதனை என்பது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்திவிட்டு அதற்கு வேறு பெயர்களை சூட்டி செயல்படுத்துவதுதான் அவர்கள் சாதனை.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததைப் போல தற்போதும் பேசி வருகின்றனர். சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பதற்கு ஒரு திட்டமும் இல்லை.
சசிகலாவை ஜனநாயக முறைப்படி அ.தி.மு.கவின் பொதுச் செயலராக ஆக்குவோம் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார் என்பது கேள்விக்கு ?
நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே வெட்டவெளிச்சமாக யார் பொறுப்பாளர்கள் யார் யார் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை வெட்ட வெளிச்சமான நீதிமன்றம் வழங்கி உள்ளது. அவர்களை கட்சியில் சேர்ப்பதற்கான சிந்தனை எந்த ஒரு தொண்டர்களுக்கும் கிடையாது. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தலைமைக்கு தான் நாங்கள் கட்டுப்படுவோம். அ.தி.மு.க.,வில் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்களது முடிவை ஏற்றுக் கொண்டனர். பொதுமக்களை பாதிக்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு அதிமுக முன் வந்து போராடும். அதிமுகவில் தற்போது நடந்து வரும் தேர்தல் வெளிப்படையாக ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க கட்சியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் அதில் தகுதியானவர்களை கட்சி தான் தேர்ந்தெடுக்கும். அதிமுகவிலிருந்து பலபேர் போகவில்லை கொஞ்சம் பேர்தான் போகின்றார்கள் அவர்களைப் பற்றி பேச ஒன்றுமில்லை. மதுரை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக வந்து தேர்தல் நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!