தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிகிறது. இதையடுத்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் முதல் கடைமட்டத் தொண்டன் வரை தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.
அதுமட்டுமல்ல, திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, தனியாக நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுவதால், பரப்புரையில் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் எங்கு எல்லாம் இறுதிகட்டமாக பரப்புரை மேற்கொண்டனர் என பார்ப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -தென்சென்னை, மத்திய சென்னை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சேலம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை - கோவை பீளமேடு
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் - கோவை.
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. -தூத்துக்குடி.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - திருவள்ளூர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. -தருமபுரி.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.- திருச்சி.
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.- சிதம்பரம்.
த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. - ஸ்ரீபெரும்புதூர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் -திண்டுக்கல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராஜன் -திண்டுக்கல்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் - நாகப்பட்டினம்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி - தஞ்சாவூர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் -மதுரை,தென்காசி, விருதுநகர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் -ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி- வேலூர், திருவண்ணாமலை.