அமாவாசை நாளான ஜீன் 28ல் ஆதரவாளர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுகவின் அடுத்த பொதுக்குழு ஜீலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளாதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, அடுத்த கட்ட பணிகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொதுக்குழு:


கடந்த ஜீன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்போது 23 தீர்மானங்களை ஓ.பன்னீர்செல்வம் முன் மொழிந்தார். ஆனால் அனைத்து தீர்மானங்களையும், இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேசினார். மேலும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள் என முனுசாமி தெரிவித்தார். அனைத்தையும் நிராகரித்த அவர்களின் ஒற்றை கோரிக்கை ஒற்றைத்தலைமை. ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது அந்த தீர்மானங்களோடு இணைக்கப்படுகிறதோ, அப்போது பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். மேலும் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என கே.பி.முனுசாமி பேசினார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.






அடுத்த கட்டம்:


பரபரப்பாக பொதுக்குழு நடந்த முடிந்த நிலையில், ஜீன் 28ம் தேதி ஆதரவாளர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, அடுத்த கட்ட பணிகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண