சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி மாணவர் அணி திமுக சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனை பொதுக்கூட்டம் மற்றும் மாணவ, மாணவிகள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கந்தன்சாவடிகள் நடைபெற்றது. 



சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி மாணவர் அணி அமைப்பாளர் ம.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பாடநூல் கழக வாரியத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர். கூட்டம் நடைபெறும் போது திடீரென மழை பெய்தபோது சிலர் குடை பிடித்தபடியும், சிலர் அமர்ந்திருந்த நாற்காலியை தலைக்கு மேல் வைத்துக் கொண்டும் கொட்டும் மழையிலும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 



இறுதியில் 199 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகைக்கான காசோலையை மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதை தொடர்ந்து 2099 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்அரவிந்த்ரமேஷ் வழங்கினார். 

 

இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் :

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளை அகற்றினர் இந்த சாதனை இந்தியாவில் உள்ள எந்த தொகுதியிலும் நடைபெறவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்றிய சரித்திரம் இல்லை என்று பெருமிதம் கொண்டார். 

 

அதை தொடர்ந்து பேசிய தமிழக பாடநூல் வாரியத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி :-

 

இசைஞானி இளையராஜாவிற்கு சாதி, இனம், மதம் எதையும் பார்க்காமல் இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் வழங்கினார். ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் பாரத பிரதமர் எம்.பி. பதவியை கொடுத்துள்ளார். பதவிக்காக அடித்துக்கொள்ளும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்யை குட்டி கதை சொல்லி மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் என்றும் டுபாக்கூர் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரை கை நீட்டி பேசியதற்கு எந்த அருகதையும் கிடையாது என்றார். மேலும் 2290 பொதுக்குழுவினர் காலில் விழுந்து பொதுச்செயலாளராக பொறுப்பெற்றுள்ளார் என்றார். 



மூன்று திருடன்களை பற்றி மேலும் ஒரு குட்டிகதையை சொன்ன திண்டுக்கல் ஐ.லியோனி மூன்று திருடர்கள் சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ் என தமிழக முதல்வரை கை நீட்டி பேசியதற்கு கடுமையாக விமர்சித்தார்.