OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்

OPS: ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.

Continues below advertisement

பிரிந்து உள்ள.அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மீண்டும் அதிமுக 2026 இல் அதிமுக ஆட்சியில் அமரும் என்று செங்கோட்டையன் பேசியுள்ளார்.

Continues below advertisement

வாணியம்பாடியில்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற  ஓபிஎஸ் அணியின் வாணியம்பாடி நகர செயலாளர் கோபி சங்கர் ரேவதி ஆகியோரின் மருமகள் நித்தியா சீனிவாசன் என்பவரின் சீமந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார். முன்னதாக வாணியம்பாடிக்கு வருகை தந்த ஓபிஸ்க்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே  கருத்துவேறுபாடு  உள்ளதாக தகவல் வெளியாவது குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர் என்று பதில் அளித்தார். 

வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல், தற்போது தான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் என்பது தகவல் வெளியாகும். 

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும்  ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக கொடுத்துள்ளார்கள். அதே போன்று பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை சேமித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்தார்.

அதிமுகவுடன் தவெக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதற்கான கேள்விக்குஅன்பு சகோதரர் சிறந்த திரைப்பட நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சியை துவக்கி உள்ளார்.அந்த இயக்கம் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அவர் கொள்கை முடிவு தெரிவித்த பின்னர் அதற்கான பதிலை நான் தருகிறேன் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு.உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola