விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவி சண்முகம் தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை எனவும் மாறாக திரும்பும் திசையெல்லாம் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது எனவும்  தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள திமுக ஆட்சியை அகற்றி விட்டு அதிமுக ஆட்சியை கொண்டுவர மகளிர் முன்வந்துள்ளார் என பேசினார். மேலும் நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்

Continues below advertisement

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுவையில்:

திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக் கொண்டிருக்கும் திமுக, இந்த பட்ஜெட் என்பது ஓடாத வண்டியை பட்டி, டிங்கரிங் பார்த்துள்ளனர். எவ்வளவு தான் பட்டி, டிங்கரிங் பார்த்தாலும் இந்த வண்டி ஓடாது. இந்த பட்ஜெட் முழுமையான பூசி மொழுகி மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்துள்ளது.

Continues below advertisement

ரூ பயன்படுத்தப்பட்ட தொடர்பான கேள்விக்கு:

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மிகப்பெரிய தவறை தமிழக அரசு செய்துள்ளது. பாஜக அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நிதி மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. அதனை மாநில அரசு மாற்றுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மத்திய அரசு இதற்கு உடனடியாக 157 சட்டப்பிரிவின் படி தாக்கியதை அனுப்பியிருக்க வேண்டும். எனவே பாஜகவும், திமுகவும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் தொடர்பான கேள்விக்கு:

அமலாக்கத்துறைக்கு இன்றைக்கு தான் கண் தெரிந்துள்ளது. இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். என தெரிவித்தார்.