உச்சநீதிமன்றம் இன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு  செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் வசம் சென்றது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்பதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வேதனை அடைந்தனர்.


இந்த நிலையில், தேனி பெரியகுளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், "தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறினார். 


மேலும், அடுத்தகட்ட  நடவடிக்கை குறித்து உரிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


ஒன்றைக்கோடி தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என ஈ.பி.எஸ்., சொல்கிறாரே என செய்தியாளர்கள் கேள்விக்கு, யார் பக்கம் இருக்கிறோம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஓ.பி.எஸ் பதிலளித்தார்.


மேலும், உங்களின் கேள்விகள் அனைத்திற்கும் அறிக்கையாக தெரிவிக்கிறேன் என பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 


பொதுக்குழு:


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கி ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.


எடப்பாடி தலைமையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு:


இந்நிலையில், வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது. கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.  




தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடிக்கு தான் என தெரிய வந்துள்ளது. இதனால் உற்சாகம் வெள்ளத்தில் மூழ்கிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சமி படத்திற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்த நிலையில், தேனி பெரியகுளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் "தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறினார். 


Also Read: AIADMK: “கலங்கி போயிருந்தேன்; இரவு தூங்கல; எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது” - தீர்ப்புக்கு பின் இபிஎஸ் சரவெடி பேச்சு