இரட்டை தலைமை பதவி காலாவதியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 5-ல் ஒரு பங்கு பேர் ஆதரவு இருந்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்டலாம் ” எனத் தெரிவித்தார். ஜீலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இபிஎஸ் தரப்பான சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவைத் தலைவரை தேர்வு செல்லும்:
நேற்று நடந்த பொதுக்குழு கூட்டம் முறையற்றது என வைத்திலிங்கம் கூறுவது முறையல்ல என்றும் 23 தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் குறிப்பிடவில்லை. 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாததால், தோல்வியடைந்தது என அறிவிக்கப்பட்டது. கழகத்தின் பொதுக்குழு கூடிதான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என விதி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி இல்லை.
”இரட்டை தலைமை காலாவதியானது”
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, பொதுக்குழுவில் அங்கீரகாரம் பெறாத காரணத்தால், 2 பதவிகளும் காலவதியாகின என்று சண்முகம் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியிலும் நீடிப்பார்கள் எனத் தெரிவித்தார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்.
”அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு”
சட்டம் இயற்றவோ, திருத்தவோ, நீக்கவோ அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பொதுக்குழு தான். பொதுச் செயலாளருக்கோ, யாருக்கோ இல்லை எனவும் தெரிவித்தார். நிர்வாகிகள் தேர்வுக்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்க வேண்டும் என விதிகள் இல்லை.
”தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற தேவையில்லை”
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கழக தேர்தலை நடத்துங்கள், பின் அதனை எங்களுக்கு தெரிவியுங்கள் என்றுதான் தேர்தல் ஆணையம் கூறுகிறதே தவிர, ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறவில்லை. மேலும் அனைத்து கட்சி முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”இரட்டை தலைமை காலாவதியானது”
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, பொதுக்குழுவில் அங்கீரகாரம் பெறாத காரணத்தால், 2 பதவிகளும் காலவதியாகின என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியிலும் நீடிப்பார்கள் எனத் தெரிவித்தார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்
”அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு”
சட்டம் இயற்றவோ, திருத்தவோ, நீக்கவோ அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பொதுக்குழு தான். பொதுச் செயலாளருக்கோ, யாருக்கோ இல்லை எனவும் தெரிவித்தார். நிர்வாகிகள் தேர்வுக்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்க வேண்டும் என விதிகள் இல்லை.
”தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற தேவையில்லை”
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கழக தேர்தலை நடத்துங்கள், பின் அதனை எங்களுக்கு தெரிவியுங்கள் என்றுதான் தேர்தல் ஆணையம் கூறுகிறதே தவிர, ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறவில்லை. மேலும் அனைத்து கட்சி முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் இல்லை