தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இதனால் அதிமுகவின் இரட்டை தலைமை வகிப்பது அதனால் தோல்வி ஏற்பட்டது என்று சர்ச்சை உருவானது. இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் மழையில இதனை தொடர்ந்து தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து ஜெயலலிதாவின் சமாதி முன்பு தர்ம யுத்தம் நடத்தியது அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்நிலையில் மீண்டும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டுமென்று ஓபிஎஸ் இன் சொந்த மாவட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


ஆன்மீக சுற்றுப்பயணத்தில் சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா


 



நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா அவரது உறவினர் விவேக் அவரது மனைவி மற்றும் இளவரசி ஆகியோர் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூருக்கு அடுத்து அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து அவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திடீரென அவர் தங்கியிருந்த விடுதியில் பக்கத்து அறையில் ராஜாவும் தங்கினார். நேற்று இரவு திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்ட சசிகலாவை ராஜா சந்தித்து வணக்கம் செலுத்தினார். இதனை தொடர்ந்து சசிகலா கோயிலுக்கு போய்விட்டு வந்து சந்திப்பதாக கூறி சென்றார்.


திருச்செந்தூரில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதை


 



திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த சசிகலாவுக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் கோயிலில் ஏகாந்த சேவையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய சசிகலாவை அவரது அறையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். இன்று காலை சசிகலா திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.



தேனியில் ஓபிஎஸை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்


இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான சி. செல்லப்பாண்டியன் தேனி மாவட்டம் சென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை  சந்தித்தது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தேனி செல்கிறாரா சசிகலா?


இன்று சசிகலா தென்காசியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு ராஜபாளையம் வழியாக மதுரை சென்று சென்னை செல்வதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சென்னை செல்வதற்கு முன்னதாக சசிகலா மதுரையில் வழியாக தேனி செல்லலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சசிகலா மேற்கொண்டுள்ள ஆன்மீக பயணத்தின் ஆன் தி வேயில் தென் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆசி பெற போகின்றதாகவும் அதிமுக தலைமை ஏற்க அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.