நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் விஜய்யையும் அண்ணா என்று அழைக்கிறார்கள். தங்களையும் அண்ணா என்று அழைக்கிறார்கள். 

பஞ்சாபிலும் சீமான் அண்ணா:

இதுதொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, சீமான் பதில் அளித்து கூறியதாவது, அண்ணா எத்தனை அண்ணா வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் கட்சியில் என்ன முரண் என்றால் எங்கள் தலைவரை அனைவரும் தம்பி என்று சொல்வார்கள். சிறியவர்களும், பெரியவர்களும் தம்பி என்று சொல்வார்கள். 

எங்க கட்சியில் வயதில் பெரியவர்களும் என்னை அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். பஞ்சாபில் எல்லாம் 85 வயது, 75 வயது பெரியவர் எல்லாம் என்னை சீமான் அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். சீக்கியர்கள் எல்லாம் சீமான் அண்ணா.. சீமான் அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். அது அன்பின் மிகுதியால் வரும் சொல். 

அப்பா, தாத்தா:

சொல்லுங்க, சொல்லுங்க என்று சொல்லுங்க அப்பா என்று வருவது இல்லை. ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தனர். நமது குலத்தில், நமது பரம்பரையில் சின்னக்குழந்தையா இருந்தால் தாயே, அம்மா என்று அழைப்பது பழக்கம். அவர்கள் வரும்போது அவர்களை செல்வி என்றுதான் அழைத்தார்கள். ஒரு காலகட்டத்தில் அவர்கள் பெரியவர்களாக அம்மா என்று பாசத்தில் அழைப்பது இதுவாகிவிட்டது. அதேமாதிரி அனைவரும் அப்பா, தாத்தா என அழைக்குமாறு சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. 

அப்பனே முருகா! சிவனே அப்பா!

அன்பின் மிகுதியால் யாரையும் கூப்பிடலாம். நான் நிறைய பேரை அப்பா என்றுதான் அழைப்பேன். சீமானுக்கு எத்தனை அப்பா? என்று கேட்டார்கள். எனக்கு அறிவைப் புகுத்திய ஒவ்வொருத்தவரும், ஞானத்தை கற்பித்த ஒவ்வொருவரும் எனக்கு அப்பாதான். ஒருவரிடம் இருந்து ஒன்றை கற்றுக்கொண்டால் அவர் அப்பாதான், ஆசிரியர்தான் வழிகாட்டிதான். முருகன் என்னைப் பெற்றவரா? அப்பா முருகா, ஞான பண்டிதா!சிவனே அப்பா என்கிறோம். பாசத்தில் பக்தியின் ஈடுபாட்டின் மிகுதியில் வரும் சொல். 

இவ்வாறு அவர் கூறினார். 

சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் மக்கள் தன்னை பாசத்துடன் அப்பா என்று அழைப்பதாக வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவிற்கு தமிழ்நாட்டில் அரங்கேறிய பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஒப்பிட்டு பலரும் மு.க.ஸ்டாலினை விமர்சித்தனர். 

மேலும், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு அவரை அக்கட்சியின் தொண்டர்கள் அண்ணா, அண்ணா என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே அவரை அவரது ரசிகர்கள் அண்ணா என்று அன்புடன் அழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.