நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விகடன் டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த பேட்டி:



 

இங்கு நீண்ட காலமாக திமுக தான் சங்கி. கொளத்தூரி்ல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கல்லூரியில் இந்து பேராசிரியர் தான் பணியாற்ற முடியும் என்று ஆணை போட்டார்கள். நான் மட்டும் தான் அதை எதிர்த்தேன். அரசே அந்த ஆணை போட்டது. எச்.ராஜாவை முதன்முதலில் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றது யார்? நல்லகண்ணுவை தோற்கடித்து சி.பி.ராதாகிருஷ்ணனை சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றது யார்? திமுக தானே. இப்போ வந்து நல்லவன் வேஷம் போட்டா எப்படி?

 

எல்லாத்தையும் அவர்கள் செய்து விட்டு, சீமானுக்கு போட்டா பாஜக வந்துடும், நாம் தமிழருக்கு போட்டா பாஜக வந்துடும்னு சொன்னா... செருப்பை காட்டியதோடு நிற்க மாட்டேன்... அடிச்சுட்டு வந்திருவேன். இப்படி அவர்கள் பேசுவது தான் மூர்க்கத்தனமாக்குகிறது. சீமான் சும்மா பேசுவான் என நினைக்கிறார்கள். கெட்டப்பயனு தெரியல அவங்களுக்கு. சாட்டை துரைமுருகன் சொன்ன அதே வார்த்தையை, எடப்பாடியை பார்த்து ஸ்டாலின் பேசியிருக்கிறார், ஆதாரம் இருக்கிறது. துரைமுருகனை சிறையில் அனுப்ப காட்டிய ஆர்வத்தை, மாரிதாஸ் கைதின் போது தமிழ் நாடு போலீஸ் காட்டவில்லையே.

உலகத்திற்கே தெரியும் ஜக்கி. காட்டை ஆக்கிரமித்திருக்கார் என்று. அவர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே ஆதாரம் இருப்பதாக கூறுனார். ஆக்கிரமிப்பு இல்லை என தமிழ்நாடு அரசே இப்போது கூறிவிட்டது.  கடுப்பு வருமா வராதா...? புத்தகங்களை படித்ததால் அமைதியா இருக்கேன்... இல்லையென்றால் அடித்து எறிந்திருப்பேன்...! 



 

நான் யாரையும் ஒருமையில் பேசவில்லை. கடவுள் முருகனை, அவன் இவன், என அன்பின் மிகுதியில் பேசுவதில்லையா; அப்படி தான். மாரிதாஸ் சிறையிலிருந்து 4 நாளில் வெளியே வந்தாரா இல்லையா...அடுத்தடுத்து அவர் மீது வழக்கு போடுவது, நாடகம். போன ஆட்சியில் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியவில்லை. இந்த ஆட்சியில் எச்.ராஜாவை கைது செய்ய முடியவில்லை. இது ஒரு நாடகம். பாஜகவிற்கு எதிராக இருப்பதாக ஒரு நாடகம். மாரிதாஸிற்கு எதிராக அரசு தரப்பு வழக்கிறஞர் ஏன் நிற்கவில்லை? எனக்கு பதில் வேண்டும். அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்வதற்காகவாவது எனக்கு ஓட்டளியுங்கள் என்ற ஸ்டாலின், இன்று விடுதலை செய்துவிட்டாரா? 

 

எதிர்கட்சியா இருந்த போது வேற பேசுனீங்க. இப்போ ஆளுநர் ரவியை பார்க்குறீங்க... வேற ஒன்று செய்றீங்க... மறுபடியும் ஆளுநரை பாக்குறீங்க... வேற எதுவோ செய்றீங்க..! திமுகவை விமர்சிக்கும் கோட்பாடு எனக்கு இல்லை. அது என் கொள்கையும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் திமுகக்காரன். 

ஈழப் போருக்கு பின் என் நிலைப்பாடு வேறு. அதன் பின் திமுகவை எதிர்க்க வேண்டும் என்று இல்லை, ஒழிக்க வேண்டும் என நிலைப்பாடு எடுத்தேன். மாரிதாஸ் தனிப்பட்ட முறையில் என்னை தான் அதிகம் விமர்சித்திருக்கிறார். நான் ஏதாவது பதில் சொன்னேனா, என் தம்பிகளை கடந்து போகத் தான் சொன்னேன். 

 

எல்லா கட்சியிலும் கருத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதிலை, கருத்தாக தெரிவிக்கலாமே. சாட்டை துரைமுருகன் பேச்சை நான் கண்டிக்கவில்லை என நினைக்கிறார்களா...? மேடையிலேயே போய் கண்டிக்க முடியுமா? அவன் தவறாக எதுவும் பேசவில்லை. ஐஜி என்னிடம் கேட்டுக் கொண்டதால் தான், நான் போய் சரணடைய சொன்னேன். இதை இல்லையென்று யாராவது கூற முடியுமா? 

திமுக என் கட்சி, என்சொந்தக்காரன் கட்சி. திமுகவா-பாஜகவா... என வந்தால் எனக்கு பாஜக தான் எதிரி. எனக்கும் முதல்வருக்குமான சண்டை, அண்ணன், தம்பி சண்டை, பங்காளி சண்டை. இப்பவும் துரைமுருகன், ஆ.ராசா, திருச்சி சிவா போன்றோர் என்மீது அன்பு கொண்டவர்கள்.



முதல்வர் ஸ்டாலின் என்னிடம் உரிமையாக பேசுவார். அவர் மகன் மாதிரி தான் நான். என் மீதான அவரின் அன்பும், அவர் மீதான என் பாசமும், எங்கள் இருவருக்கும் புரியும். சரியா செய்யுங்க என்பதை தான் நாம் சொல்றோம். இத்தனை வருசத்துக்கு அப்புறம், இப்போ தான் தமிழில் கையெழுத்து போடணும்னு வந்திருக்காங்க. சரி... இப்போவாது வந்தீங்களே! எதிர்த்துக் கொண்டே இருக்க  வேண்டும் என்கிற மனநோய் என்னிடத்தில் இல்லை. 2009-2011 ல் நான் உணர்ச்சிவயப்பட்டு பேசினேன். இப்போது அப்படி நான் பேசுவதில்லை. பொய்யை உண்மை என நிரூபிப்பது தான்  திராவிடம். 

நான் ரோட்டில் மல்லுக்கட்டி உருண்ட ரவுடி... அதுக்கு அப்புறம் தான் இந்த வேலைக்கே வந்திருக்கேன். நான் சண்டை போட்டு உருண்டதை ஏசியாக இருந்த எஸ்.எஸ்.வி.சந்திரசேகர் நேரில் பார்த்து, என்னை அனுப்பி வைத்தார்.  ஒரு காலத்தில் நான் வேறு மாதிரி இருந்தேன். அந்த மாதிரி இருந்தால், ‛எடுடா வண்டியை....’ என்றிருப்பேன். நான் ஒரு கேடுகெட்ட காட்டான். பக்குவப்பட்டு ஒதுங்கிட்டேன்.