'மடியில் கனமில்லை,,,,  வழியில் பயமில்லை....... பழிவாங்கும் நோக்கில் எத்தனை சோதனைகள் வந்தாலும்  திராவிட  மாடல்  அரசு முறியடிக்கும்' என திண்டுக்கல் ஐ. லியோனி பேசினார்.




கரூர் மாவட்டம் குளித்தலையில் முத்தமிழறிஞர்  கலைஞரின்  நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ. லியோனி  சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்ட திமுக சார்பில்   முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பர் கோவில் அருகில் இன்று மாலை  சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட திமுக செயலாளரும், , தமிழ்நாடு  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். குளித்தலை சட்டமன்ற  உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது டாக்டர் கலைஞரின்  கலைப்பணியே! அரசியல் பணியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.    பட்டிமன்றத்திற்கு கழக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவரும்மான திண்டுக்கல் ஐ. லியோனி நடுவராகவும், கலைப்பணியே என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், நாகநந்தினி ஆகியோரும், அரசியல் பணியே என்ற தலைப்பில் விஜயகுமார், கோவை தனபால் ஆகியோரும் பேசினார்கள்.        


பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து திண்டுக்கல் லியோனி பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சிதான் இன்றைக்கு நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.  இந்த ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.  ஸ்டாலின்  சமுக நீதி, சமத்துவம், பெண் விடுதலை என தலைவர் கலைஞரின் வழியில் சிறப்பாக  ஆட்சி நடத்தி வருகிறார். 




 


உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதால் 20 சதவீதம் மகளிர் உயர்கல்வி பயில்வது அதிகரித்துள்ளது. இது திராவிட மாடல் அரசு.    


பேருந்து பயணத்தின் போது டிக்கெட் எடுக்காதவர்களை பிடிப்பது வழக்கம். ஒரு ஊரில் பேருந்தில்  இருந்து இறங்கி ஒருவர் வேகமாக ஓடினார். அவர் டிக்கெட் எடுக்கவில்லை என சந்தேகப்பட்டு அவரை துரத்திக் கொண்டே ஓடினார், அவர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார். அவரை தேடிப் பிடித்த போது அவர்தான் மாப்பிள்ளை என தெரியவந்தது. அவர் டிக்கெட் எடுத்து காண்பித்து விட்டார். அதைப்போல கரூரில் பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகளை ஏவி விட்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை என்பதை போல  எத்தனை சோதனை நடத்தினாலும் இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்ற அவர்,  திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது  கலைஞரின் அரசியல் பணியும், கலைப்பணியும் இரண்டும் சேர்ந்ததுதான்” என்றார்.





இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோவன், சிவகாமசுந்தரி, மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, மா மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் கரூர் முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  சுப .ராஜகோபால், சிவராமன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி , நகர் மன்ற தலைவர் சகுந்தலா, ஒன்றிய செயலாளர்கள், சந்திரன், தியாகராஜன், அண்ணாதுரை, கதிரவன், கரிகாலன், ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கலைமணி, மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  தோகமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான ராமர்  நன்றி கூறினார்.