எஸ்டிபிஐ முன்னாள் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட நெல்லை முபாரக், கடந்த செப்டம்பர் மாதம் தனிப்பட்ட காரணங்களைக் கூறி மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து கட்சியின் இடைக்காலத் தலைவராக உமர் ஃபாரூக் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென கட்சியில் இரு கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, தற்போது கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். 

 மனசாட்சியோடு செயல்பட்டேன்

இதுதொடர்பாக நெல்லை முபாரக் தனது சமூக வலைதள பக்கத்தில்: நான் கடந்த 31 ஆண்டுகளாக இறைநாட்டப்படி பொதுவாழ்வில் பயணித்து வருகிறேன். அதில் எனது அரசியல் பயணமாக, SDPI கட்சியின் தமிழக முதல் உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, முதல் மாநில நிர்வாகப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத்தலைவர், அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாநிலத் தலைவர், தேசியச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசியச் செயலக (Secretariat) உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை என்னால் இயன்றவரை சுமந்தேன். இறைநாட்டப்படி மனசாட்சியோடு செயல்பட்டேன்.

Continues below advertisement

இதையும் படிங்க: ஃபீல் பண்ணாதே! தைரியமா இரு! தாய் சொல்ற வார்த்தையா இது!தலையில் அடித்து கொள்ளும் கிருஷ்ணசாமி

அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகல்

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பலவிதமான அவதூறுகள் தேவையற்ற வகையில் பரவி வருகின்றன. இதனால் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.  எனவே, இந்தக் கடினமான, கசப்பான சூழலில் தொடர்ந்து என்னால் SDPI கட்சியில் பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். ஆகவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் இத்துடன் விலகிக் கொள்கிறேன்.

எந்த கட்சியில் இணைகிறார்?

இதுகாறும் எனக்கு அனைத்து வகையிலும் உதவிய, ஒத்துழைப்பு நல்கிய எனது சக மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தேசியச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், அண்டை மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்டம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகளுக்கும், துணை அமைப்புகளின் உறவுகளுக்கும் மற்றும் என் இதயம் நிறைந்து நிற்கின்ற சகோதர சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆயிரமாயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடைந்த, கனத்த இதயத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் என தெரிவித்துள்ளார். எஸ்டிபிஐ கட்சியில் இருந்து முபாரக் விலகிய நிலையில் அடுத்து திமுகவா, தவெகவில் இணையப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.