Bihar Election 2025 NDA: பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

Continues below advertisement

என்டிஏ கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள்:

பீகார் சட்டமன்ற தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 6ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. 'சங்கல்ப் பத்ரா' என்ற பெயரில் அந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் உட்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வி மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. துறை வாரியாக வழங்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

துறைவாரியான வாக்குறுதிகள்

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்

  • அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா திறன் மையங்களை நிறுவுதல்
  • மாவட்டத்திற்கு 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் மாநிலம் முழுவதும் 100 MSME பூங்காக்கள்
  • 50,000 சிறு குடிசைத் தொழில்களை ஊக்குவித்தல்
  • சிப் உற்பத்தி, குறைக்கடத்தி மற்றும் மொபைல் தொழிற்சாலைகளை அமைத்தல்
  • மின்னணு உள்கட்டமைப்பில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு

பெண்களுக்கு அதிகாரமளித்தல்

  • 1 கோடி பெண்கள் லட்சுமி தீதிகளாக (சுய உதவிக்குழுத் தலைவர்கள்) மாறுவார்கள்
  • பெண் தொழில்முனைவோரை கோடீஸ்வரர்களாக ஊக்குவிக்க "மிஷன் குரோர்பதி" தொடங்கப்படும்

விவசாயிகள் மற்றும் மீன்வளம்

  • கிசான் சம்மான் நிதி ஆண்டுக்கு ரூ.6,000 லிருந்து ரூ.9,000 ஆக உயர்வு.
  • மீன் வளர்ப்பவர்களுக்கான உதவித் தொகை இரட்டிப்பாக ரூ.9,000 ஆக உயர்த்தப்படும்.
  • அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்தை செயல்படுத்துதல்.

கல்வி மற்றும் சமூக நலம்

  • ஒவ்வொரு பிரிவிலும் SC/ST மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளிகள்
  • உயர்கல்வி பயிலும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2,000
  • EBC மாணவர்களுக்கு ரூ.200 கோடி நிதி உதவி
  • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச தரமான கல்வி
  • மதிய உணவு திட்டத்தில் பால் மற்றும் முட்டைகள் சேர்க்கப்படும்
  • மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த ரூ.5,000 கோடி திட்டம்

உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு

  • 7 விரைவுச் சாலைகளின் மேம்பாடு மற்றும் 3,600 கி.மீ. ரயில் பாதைகளின் நவீனமயமாக்கல்
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்
  • பாட்னா, கயா, பூர்னியா மற்றும் பாகல்பூரில் பெருநகரங்களின் விரிவாக்கம்
  • முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் மற்றும் சீதா தேவியின் பிறப்பிடமான சீதாமர்ஹியில் நவீன நகர்ப்புற மேம்பாடு.

இளைஞர் மற்றும் விளையாட்டு

  • முக்கிய மாவட்டங்களில் மெகா விளையாட்டு மையங்கள்.
  • ஆண்டுதோறும் 50,000 இளைஞர்கள் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

ஆளுகை மற்றும் வளர்ச்சி

  • பீகாரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், விவசாயம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தவும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.