ராஜ்யசபாவில் பிஜூ ஜனதா கட்சி-க்கு ஒன்பது எம்.பி.க்கள் உள்ளனர், அதே சமயம் 1997 ஆம் ஆண்டிலிருந்து, முதல் முறையாக, சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
”வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்” - நவீன் பட்நாயக்
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், தனது கட்சியின் ஒன்பது ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று ( ஜூன் 24 ) ஒரு கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ராஜ்ய சபையில் "துடிப்பான மற்றும் வலுவான" எதிர்க்கட்சியாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். மாநில நலன்கள் தொடர்பான பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
ராஜ்யசபாவின் என்ன பேசுவார்கள்?
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபாவின் பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா, “இந்த முறை பிஜேடி எம்பிக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மையத்தில் உள்ள பாஜக தலைமையிலான அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளோம். ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து, மோசமான மொபைல் இணைப்பு மற்றும் மாநிலத்தில் குறைந்த வங்கிக் கிளைகள் உள்ள நிலையில், இது போன்ற கோரிக்கைகளை பிஜேடி எம்பிக்கள் எழுப்புவார்கள் என்று பத்ரா கூறினார்.
”ஒடிசாவின் நலன்தான் பிரதானம்”:
பிஜேடி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரித்தது மட்டுமல்லாமல் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கவும் உதவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நவீன் பட்நாயக்கின் கட்சி, NDA அரசாங்கத்திற்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவை வழங்கும் தனது முந்தைய நிலைப்பாட்டை தொடருமா என்ற கேள்வி எழுப்பபட்டது,
அதற்கு பத்ரா தெரிவிக்கையில் "இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை, எதிர்ப்பு மட்டுமே. ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். "
"பிஜேபியை ஆதரிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. ஒடிசாவின் உண்மையான கோரிக்கைகளை, என்டிஏ அரசு தொடர்ந்து புறக்கணித்தால் வலுவான மற்றும் துடிப்பான எதிர்க்கட்சியாக செயல்படுமாறு பிஜேடி தலைவர் எங்களிடம் கேட்டுக் கொண்டார்" என்று எம்.பி பத்ரா தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பிஜேடிக்கு ஒன்பது எம்.பி.க்கள் உள்ளனர், அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை, மேலும், மாநிலத்தில் சுமார் 24 வருட ஆட்சியையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.