அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்தவரும், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் பொறுப்பு வகிப்பவர் சி.வி.சண்முகம். இவர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர். இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் இன்று சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார்.


அவர் அளித்த புகாரில், சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் புகார் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர், '' தலையை வெட்டி தொங்கவிடுவோம் என கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து புகாரளித்துள்ளோம். உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர் ’’என்றார்.


அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், இரட்டைத் தலைமைக்கு எதிராகவும் கோஷங்கள் வலுத்து வரும் சூழலில், சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




முன்னதாக, அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக நிராகரிப்பதாக மேடையிலே சி.வி.சண்முகம் அறிவித்தார். அதுமட்டுமின்றி, இரட்டைத் தலைமையால் கட்சிக்கு பின்னடைவு என்றும், ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். மேலும், நேற்று நிருபர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை காலாவதியாகிவிட்டதாக கூறினார். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இனி கிடையாது என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் என்றும், ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் என்றும் கூறினார்.


இதுமட்டுமின்றி, திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு வரும் ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என்றும் கூறினர். மேலும், சற்று முன் நிருபர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து வரும் பரபரப்பான நிகழ்வுகளுக்கு மத்தியில் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம் அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கும், வரும் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், தாங்கள் இணைந்தே செயல்பட விரும்புவதாகவும், அதேசமயத்தில் பொதுக்குழுவை கூட்ட  பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : ஓட்டெடுப்பு நடத்தி தலைமையை நிரூபிக்க தயாரா? - அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சவால்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண